உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 234 தொகுதிகளிலும் தி.மு.க., தனித்து போட்டியிடுமா? சீமான் கேள்வி

234 தொகுதிகளிலும் தி.மு.க., தனித்து போட்டியிடுமா? சீமான் கேள்வி

தர்மபுரி: 234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வெற்றி பெற முடியுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.தர்மபுரியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் கொடுத்துள்ளது. 3 நாளில் வழக்கை முடிக்க போலீசார் விரும்புவது ஏன்? ஓசூர் வந்து என்னிடம் சம்மன் வழங்க மாட்டார்களா? கதவில் சம்மனை ஒட்டியதன் நோக்கம் என்ன? வீட்டு கதவா விசாரணைக்கு வரப்போகிறது? சம்மனை கிழித்தால் என்ன? சம்மன் ஒட்டுவதோடு போலீசாரின் வேலை முடிந்தது. சம்மனை நாங்கள் கிழித்தால் அவர்களுக்கு என்ன? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும். இது எந்த மாதிரியான அணுகுமுறை.

வன்கொடுமை

சம்மன் நான் படிக்க கொண்டு வந்தீர்களா? நாட்டு மக்கள் படிக்கவா? அண்ணா பல்கலை மாணவி வழக்கில் என்ன நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். இது என்ன பாலியல் வழக்கு? அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் விஷயத்தை சொல்லலாம். புகார் மீது விசாரணை நடத்திய பின் தான் குற்றம் நடந்ததா என்பது தெரியும். என்னை சமாளிக்க முடியாமல் தி.மு.க., அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. என்ன காரணம்? விருப்பம் இல்லாத பெண்ணை நான் வன்கொடுமை செய்தது போல் பேசுகின்றனர்.

பெரிய தலைவன்

எவ்வளவு வழக்குகள் இருந்தபோதும் என் மீது ஏன் இவ்வளவு வேகம் காட்டுகின்றனர். என்னை சமாளிக்க முடியவில்லை. ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு வாங்க முடியுமா? உண்மையில் பெரிய கட்சி நான் தான். நான் தான் பெரிய தலைவன். தனித்து நின்று என்னை எதிர்க்க முடியுமா? 234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வீழ்த்த முடியுமா?

தமிழா? திராவிடமா

2026ம் ஆண்டு தேர்தலில் நீங்களும் 234 தொகுதி? நானும் 234 தொகுதி? கூட்டணி ஏதும் இருக்க கூடாது. 2026ம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம். கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் நின்று பார்ப்போம். ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் ஓட்டு கேளுங்கள். நான் சாதாரண விவசாயின் மகன். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.

மாலை 6 மணிக்கு!

நான் நினைக்கும் போது வருவேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்ன ஆனது? அந்த சார் என்பது எந்த சார்? அதிகாரம் நிலையானது என்று செய்யாதீர்கள். போலீசார் ரொம்ப ஆர்வப்படுகிறார்கள். போவேன். மாலை 6 மணியளவில் விசாரணைக்கு போவேன். அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும் அவ்வளவு தானே? இதற்கு முன் நான் சிறைக்கு சென்றதெல்லாம் இல்லையா நான் அஞ்ச மாட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

s.sivarajan
பிப் 28, 2025 18:06

தங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமென்று மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள், பெரும்பான்மையானோர், காசு கொடுக்காமல் தனித்துநிற்கும் அரசியல் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்களென்றால் எல்லா கட்சிகளுமே அதைசெய்யுமே, மூலகாரணம் வாக்காளர்கள்தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 20:23

மக்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு வேட்பாளர்களைப் பற்றிய அறிவு உள்ளது ?? தேர்தலில் வேட்பாளரின் எந்தெந்த தகுதி, திறமை பார்த்து வாக்களிக்கவேண்டும் என்கிற குறைந்த பட்ச அறிவாவது மக்களுக்கு இருக்கிறதா ??


Krishnamurthy Venkatesan
பிப் 28, 2025 16:14

திமுகவின் கூட்டணி FORMULA வை மற்ற கட்சிகளும் பின்பற்றினால்தான் வெற்றி பெறமுடியும். இன்னும் வீறாப்பாக பேசிக்கொண்டு திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்காதீர்கள். ஒரு சில தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து மீதி தொகுதிகளில் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் சாமர்த்தியம் தற்போதுள்ள நிலவரப்படி திமுகவிற்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க விடாமல் செய்திடும் சாமர்த்தியமும் திமுக விற்கு உண்டு. இதுதான் 2021 தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி வெற்றி பெற்ற முறை.


Raghunathan
பிப் 28, 2025 16:10

தமிழகத்தின் விடிவெள்ளி, நாளைய முதல்வர், எங்கள் தலைவர், தானை தலைவர், மண்ணின் மைந்தன் சீமான் அவர்களால் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும் . அதை தடுக்கத்தான் அவரை கைது செய்து தேர்தல் வரை சிறையில் அடைக்க திட்டம் . தமிழக மக்கள் விளித்து எழுந்து விட்டார்கள் . ஆளும்கட்சி தோற்பது உறுதி. சீமான் ஐயா முதல்வர் ஆவதும் உறுதி. வாழ்க தமிழ். வாழ்க ஈழம். வாழ்க பிரபாகரன். வாழ்க தமிழ் தேசியம். ஒழிக திரaவிட மாடல்.


kantharvan
பிப் 28, 2025 15:51

என்ன கொடும சரவணா? இது? சங்கிக்கங்க சங்குல மிதிச்ச சீமான் காலை நக்குறானுங்க சங்கு மங்குங்க ???


Kasimani Baskaran
பிப் 28, 2025 15:28

சிறுபான்மையினர் ஆதரவு இல்லை என்றால் ஜெயிக்க முடியாது. ஆனால் இந்துக்களை எதிர்க்கும் நிலை வந்தால் அடிமைகள் தவிர ஓசியாக கிடைக்கும் இந்து ஓட்டுக்கள் கிடைக்காது. தனியாக நின்றால் தீம்க்கா ஜெயிக்க வாய்ப்பு குறைவு.


Haja Kuthubdeen
பிப் 28, 2025 15:25

உம்மை போல் அவங்க கிருக்கய்ங்களா????தனித்துதான் நிற்பேன்னு இன்னும் அடம் பிடித்தா ஜென்ம ஜென்மத்திற்கும் சட்டசபையில் ஒருத்தன் கூட நாம்தமிழர் சார்பா இடம் பிடிக்க முடியாது..ஊர் ஊரா போயி வெத்து கூச்சல் போடுவதால் பயன் இல்லை.பேசவேண்டிய இடம் சட்ட மன்றம்.


venugopal s
பிப் 28, 2025 15:14

எல்லா கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்!


Yaro Oruvan
பிப் 28, 2025 15:01

இவன் ஜமுக்காலத்துல வடிகட்டின தத்தி.. அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு.. தீயமுக காரன் நடத்துற தனியார் பள்ளில இந்தி இருக்குல்லண்னு கேட்டா எனா பதில் சொல்றான் பாருங்க ... அரசு பள்ளில சோறு ஓடுறோம்ங்கிறான் இவன் ஸ்பெஷல் தத்தி


Madras Madra
பிப் 28, 2025 14:01

234 தொகுதியிலும் நேருக்கு நேர் மோத வரியா என்று ஒரு ஆண் மகன் போல சவால் விட்டு கேட்டிருக்கிறார் சீமான் ஆனால் திமுக வில் தனியாக மோத தைரியம் உள்ள ஆண்கள் இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டும் கும்பலில் கோவிந்தா போட்டே திமுக வுக்கு பழக்கம்


ராமகிருஷ்ணன்
பிப் 28, 2025 13:55

என்ன இது புதுக் கதை. சீமாண் எப்போ சிலோன் பிரபாகரன் மகன் ஆனான். அப்புறம் இவன் சிலோன் காரனா, இங்கு எப்படி கட்சி என்ற பெயரில் பைத்தியக்கார கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறான், போலீஸ் பிடித்து நாடு கடத்தி விடுங்கள். அங்குள்ள அசல் புலிகள் இவனை மிதிக்க காத்திருக்காங்க. B K 47 உபயோகிக்காமல் காலி செய்து விடுவார்கள்.


புதிய வீடியோ