உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாம் தமிழர் கட்சி டிபாசிட் பறிபோனது

நாம் தமிழர் கட்சி டிபாசிட் பறிபோனது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டிபாசிட் ஐ இழந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,479 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.ஒரு தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (ஜூலை 13) நடந்தது. இத்தேர்தலை அதிமுக., புறக்கணித்ததால் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkcq05gu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாம் தமிழர் கட்சிக்கு, அவர்கள் ஓட்டுப் போடுவார்களா அல்லது போடமாட்டார்களா என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா சொற்ப ஓட்டுகளே பெற்று இருந்தார். மொத்தமாக, அவர் 10,479 ஓட்டுகளை பெற்றார். தேர்தலில் பதிவான ஓட்டுக்களில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை நாம் தமிழர் கட்சி பெறாததால் டிபாசிட் ஐ இழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அரசு
ஜூலை 13, 2024 21:23

இவர் பேசும் வெறுப்புப் பேச்சுக்கு இவரால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.


Loganathan Balakrishnan
ஜூலை 13, 2024 15:21

எனக்கு இப்போ தி மு க வெற்றி பெறுவதை பார்த்தால் இவங்க ஜெயிக்கலாம் இருக்கு ஆனா இந்த சீமான் மாத்தி மாத்தி பேசும் வீடியோ பார்க்கும் பொது கடுப்பாக தான் இருக்கும் ஆனா தி முக வெற்றியை விட இது எவ்ளோவா பரவாயில்லை தோணுது


S. Narayanan
ஜூலை 13, 2024 15:05

சலிக்காமல் போட்டி போடும் சீமானுக்கு வாழ்த்துக்கள்.


Godyes
ஜூலை 13, 2024 13:10

நீ ஜெயிச்சி என்ன பண்ண போற.


Godyes
ஜூலை 13, 2024 13:08

நீ ஜெயிச்சாலும் தோத்தாலும் ரெண்டும் ஒண்ணுதாம்பா


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூலை 13, 2024 13:08

விக்கிரவாண்டி தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்து விட்டது. இனிமேலாவது ஆமையன் வாய் சவடாலை குறைத்துக் கொள்ள வேண்டும். இதில் என்ன சோகம் என்றால் சைமன் தன் தற்குறித் தம்பிகளை உசுப்பேற்றுவதற்காக அடிக்கடி சொல்லும் வார்த்தை வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்பதாகும் இனிமேலாவது அவரது தற்குறித் தம்பிகள் தங்கள் அண்ணனிடம் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் நாம் தொடர்ந்து தோல்வியடைந்து வெறும் பயிற்சியை மட்டுமே செஞ்சுக்கிட்டு சோகமா இருக்கோமே எப்பதான் ஒரு தொகுதியிலாவது வென்று மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம் என்று கேட்க ஆரம்பிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ