உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலின் முயற்சிக்கு வேட்டு வைக்குமா? கமல் பேச்சு குறித்து தி.மு.க., கலக்கம்

தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலின் முயற்சிக்கு வேட்டு வைக்குமா? கமல் பேச்சு குறித்து தி.மு.க., கலக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என, கமல் கூறியது, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு வேட்டு வைத்து விடுமோ என, தி.மு.க.,வினரிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த மே 24ம் தேதி, சென்னையில் நடந்த, தக் லைப் திரைப்பட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்றார். இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pyxo8o70&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விஸ்வரூபம்

கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கர்நாட்க முதல்வர் சித்தராமய்யா, 'கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியாது' என்றார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், கன்னட அமைப்பினரும், கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றனர்.கர்நாடக உயர் நீதிமன்றமும், இதே கருத்தை தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கமலுக்கு எதிராக, கர்நாடக முதல்வர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தமிழில் இருந்துதான் மற்ற திராவிட மொழிகள் தோன்றின என்பது, தி.மு.க., எப்போதும் பேசி வருவதுதான். சினிமா வெளியீட்டு விழாவில் கமல் பேசியதால், படத்திற்கு தடை விதித்து பெரிய பிரச்னையாக்கி உள்ளனர்.மத்திய பா.ஜ., அரசை கடுமையாக எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கருத்து மோதல்

அதற்கு கிடைத்த முதல் வெற்றியாக, லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய கூட்டம் அமைந்தது. அதில் கேரளா, தெலுங்கானா முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநில கவர்னர்களின் அதிகாரம் தொடர்பான தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பினார். இது தொடர்பாகவும், தென்மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இது, மத்திய பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.இச்சூழலில் கமலின் பேச்சால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தமிழகம் -- கர்நாடகம் இடையே இணக்கமின்மையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளது. இதனால், மோடி அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இந்த விவகாரத்தில் எதுவும் கூறாமல் ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

M Ramachandran
ஜூன் 10, 2025 00:15

ஐயா லலிதா போல் கமல் ஹாசன் கன்னட பிராமணன் நாம தமிழத்தைய ஆண்ட முதலவர் கருணாநிதி / ஸ்டாலின் பூர்வீகம் நெல்லூர்.MGR பூர்வீகம் மலையாளம்ஜெயலலிதா கன்னட பிராமணர். தெலுங்கர் என்ற காரணத்தால் ஸ்டாலின் பதவி ஏர்பதற்குக்கு திருப்பதி அர்ச்சகர்கள் வந்து மந்திரம் ஓதி லட்டு கொடுத்தார்கள் பூர்விக இடத்தில் வேட்டு வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனால் தமிழன் என்றால் கொத்தடிமை ஊபீஸ்கள்.


ராஜா
ஜூன் 06, 2025 14:16

நம்ப முடியாத அளவுக்கு இருக்கு இந்த செய்தி ,கமலா இது


Kasimani Baskaran
ஜூன் 06, 2025 03:41

என்னது.. தனது குடும்பத்தையே ஒருங்கிணைக்க முடியாத தீம்க்கா தென் மாநிலங்களை ஒருங்கிணைக்க முயன்றதா?


R.MURALIKRISHNAN
ஜூன் 05, 2025 22:32

திருட்டு திராவிட கூட்டம் பிரச்சனைகளை மறைக்க அறிவாளி என கூறி கொள்ளும் ஒரு அறிவிலியை நாடியது.


Venkatesh
ஜூன் 05, 2025 22:19

பல கூட்டங்கள் தமிழ்நாடு க்கு கேடு


Vel1954 Palani
ஜூன் 05, 2025 21:01

கமலை மேதை என்று சொல்வதற்கும் ஆள் இருக்காங்கப்பா . இதை கேட்டதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.


Ganesh
ஜூன் 06, 2025 02:02

கமல் உளர வில்லை? பின்னால் விஜயின் ஜனநாயக படத்தை கர்நாடகத்திலும் தமிழ் நாட்டிலும் ரிலீஸ் செய்வதில் முட்டுக்கட்டை போட செய்த திட்டமிட்ட விஷமம். Thuqlife கர்நாடகத்தில் தடை செய்யப்பட்டாலும் கமலுக்கு அதிக நஷ்டமில்லை. அதனால் தான் தான் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் படம் ஜனநாயகத்தை எடுப்பவர் கர்நாடகத்தை சேர்ந்தவர்.


தாமரை மலர்கிறது
ஜூன் 05, 2025 18:56

அப்ப சரியான வேலையைத்தான் நம்ம சகுனிமாஸ்டர் செய்திருக்கார்.


Palanisamy T
ஜூன் 05, 2025 18:33

கமல் அவர்கள் கன்னடமொழியைப் பற்றி தவறாக எதையும் சொன்னதாக தெரியவில்லை. அவர் சொன்னதில் தவறுகள் ஏதேனுமிருந்தால் வரலாற்றுப் பூர்வமாக அதைச் சுட்டிக் காட்டி அந்த தவறுகளை சரிசெய்திருக்கலாம். அதை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களென்று நடத்துவதால் என்ன பயன்.


Ganesh
ஜூன் 06, 2025 01:46

அது சரி, தக் லைப் செந்தமிலிருந்து வந்ததா? தமிழ் திராவிட மொழிகளின் தாய் என்றால் சமஸ்கிருதம் அவற்றின் தந்தை!


venugopal s
ஜூன் 05, 2025 18:12

சமஸ்கிருதத்தில் இருந்து தான் கன்னட மொழி தோன்றியது என்று அமித்ஷா கூறிய போது வராத ரோஷமும் கோபமும் கன்னட மக்களுக்கு இப்போது மட்டும் வருவது ஏன்?


Velan Iyengaar, Sydney
ஜூன் 05, 2025 20:16

என்னது! கோவாலூ திருக்குறளை ஈர வெங்காயம் எழுதினாரா?


ramesh
ஜூன் 05, 2025 20:42

என்ன வேலன் குருடு குருடு என்றால் செவிடு செவிடு என்கிறீர்களே


vivek
ஜூன் 05, 2025 20:52

உண்மை தானே டாஸ்மாக் வேணு...


Natarajan Ramanathan
ஜூன் 05, 2025 22:45

ஏனென்றால் அமித்ஷா கூறியது உண்மையான கருத்து.


PV
ஜூன் 05, 2025 17:37

No problem. Film is kuppai