உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்

பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்

சென்னை: பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து சிதம்பரம் கூறியிருப்பதாவது:கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ 2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று பார்லிமென்ட் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.இந்த அறிவுரையை ஏற்று நிதியை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sivagiri
ஏப் 05, 2025 13:40

ரெட்டையர்டு ஆகி , பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு , இன்னும் எதுக்கு பேட்டி ?


கண்ணன்
ஏப் 05, 2025 10:03

ஐயா, நீங்கள் ஒழுங்காக அந்த நிலைக்குழுவின் அறிக்கையையோ அல்லது, அரசு எதற்காக நிதியினை விடிவிக்கவில்லை என்பதனைப் புரிந்து கொண்டோதான் பேசுகிறீர்களா? நமக்கு உங்களது அறியாமை நன்கு தெரியும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம்


Narayanan K
ஏப் 05, 2025 07:44

This guy is an useless fellow.


Nava
ஏப் 04, 2025 22:22

யோக்கியசிகா அதிமேதாவி என்று தன்னை தானே நினைத்து கொள்ளும் இந்த நபர், தன்னை ஜெயிக்க வைத்த முதலாளிகளுக்காக அப்பப்ப ஏதாவது கூவிக்கொண்டு இருக்கிறார்


manokaransubbia coimbatore
ஏப் 04, 2025 21:47

பாக்கிஸ்தானுக்கு ரூபாய் நோட் அடிக்கற மெஷினை வித்த இந்த யோக்கியர் வருகிறார் சொம்பை எடுத்து உள்ளே வைங்க.


Nandakumar Naidu.
ஏப் 04, 2025 21:41

நீங்க இன்னுமாயா பேசிக்கொண்டிருக்கிறீங்க? உங்க கதை கந்தலாகி விட்டது, வீட்டிற்கு போய் தூங்குங்க...


Mohanakrishnan
ஏப் 04, 2025 21:33

படித்த மேதாவி எதற்காக இந்த நிதி என்று தெரியாத ஒரு அறிவு ஜீவி


Mediagoons
ஏப் 04, 2025 21:25

எந்த ஒரு சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாதது மதிக்காததுதான் மத்திய மோடி அரசு .


sankaranarayanan
ஏப் 04, 2025 21:17

பசிக்கு திடீரென்று இப்போ எப்படி பசி வந்தது. தான் நிதி அமைச்சராக இருந்த போது இருந்த அவலம் இன்னுமா நீடிக்க வேண்டும்.கணக்கு கேட்டால் உடனே பார்லி நிலைக்குழு அறிவுறுத்தல் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?


K.n. Dhasarathan
ஏப் 04, 2025 21:13

பார்லி நிலைக்குழுவும் அறிவுறுத்தல் கொடுத்தாச்சு ஒன்றிய அரசு இனியாவது கல்வி நிதியை விடு விக்குமா ? அல்லது நீதிமன்றம் சென்று முக்குடை பட்டு, ஆளுநர் ரவி போல, துடைத்துவிட்டு, மீண்டும் மீண்டும் பிடிவாதம் பிடிக்குமா ? மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், சிறுபான்மை ஒன்றிய அரசு காணாமல் போகணுமா ? உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.


புதிய வீடியோ