உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாண்டியன் கோட்டையை பாதுகாக்குமா அரசு : ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு

பாண்டியன் கோட்டையை பாதுகாக்குமா அரசு : ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை : காளையார்கோவிலில் உள்ள சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டையை அரசு பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.காளையார்கோவிலில் உள்ளது இந்த பாண்டியன் கோட்டை. தற்போது பாண்டியன் கோட்டை சிதிலமடைந்த நிலையில், ஆழமான அகழி, நீராவி குளம் போன்றவை உள்ளன. இக்கோட்டை மேடு 37 ஏக்கரில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.இக்கோட்டையின் கிழக்கு பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோயிலும், தெற்கு பகுதி யில் வாள்மேல் நடந்த அம்மன் கோயிலும் உள்ளன. பாண்டியன் கோட்டை பகுதியில் ஏற்கனவே சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓடு எச்சங்கள், மண்ணால் ஆன உருண்டைகள், வட்டச் சில்லுகள், தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடு கிடைக்கப்பெற்றன. எனவே தமிழக அரசு இந்த இடத்தை பாதுகாத்து அகழாய்வு மேற்கொண்டு பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களின் வரலாறை இந்த உலகத்திற்கு அறிய செய்ய வேண்டும்.தொல்நடைக்குழு காளிராஜா கூறுகையில்,காளையார்கோவிலில் அமைந்துள்ள இந்த கோட்டையில் தமிழக அரசு அகழாய்வுத் தளம் அமைத்து அகழாய்வு செய்தால் ஆற்றுச் சமவெளி அல்லாத மற்றொரு இடத்தில் கோட்டை கொத்தளங்களுடன் மன்னர்கள் மற்றும் குடிமக்கள் வாழ்ந்த வாழ்வை நாம் உணர முடியும். சங்க கால பாடலின் எச்சமாக இன்றும் நம் கண்முன்னே இருக்கிற இந்த பகுதியை தொல்லியல் மேடாக நாம் பாதுகாப்பதுடன் தொல்லியல் ஆய்வு செய்து இதன் தொன்மையை வெளிப்படுத்துவதன் வழி இப்பகுதியின் வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றாக இதை நாம் காண முடியும். எனவே தமிழக அரசு இதில் அகழாய்வு பணி தொடங்க முன் வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி