உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் நெருங்கும் நேரத்தில் திட்டங்கள் அறிவிப்பதா? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திட்டங்கள் அறிவிப்பதா? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: தேர்தல் நெங்கும் வேளையில் மடிக்கணினி வழங்குவதாக அறிவித்த, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: திமுகவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகமே. மக்களை ஏமாற்றி திசைதிருப்ப முயலும் முதல்வர் அவர்களிடம் சில நேரடிக் கேள்விகள்:1. ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக மடிக்கணினிகள் வழங்குவதேன்?2. ஜெயலலிதாவின் திட்டத்தை நிறுத்த முயற்சித்த பின்பு மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதாலேயே மடிக்கணினிகள் வழங்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?3. திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 163-ல், டேப்லெட் மற்றும் 10GB டேட்டா கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தவே, டேப்லெட் வழங்குவோம் என்று அறிவித்தீர்கள். அப்படியிருக்க, 55 மாதங்களாக மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்?4. அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிக்குள் நுழையும் முன்பே மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், உங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ஏன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்?5. உங்களது ஆட்சியில் கடந்த பட்ஜெட்டில் 20 லட்சம் மடிக்கணினிகளுக்கு ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்றோ 10 லட்சம் மடிக்கணினிகள் மட்டுமே கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. மீதமுள்ள 10 லட்சம் மடிக்கணினிகள் என்னவாயின? உங்களுக்கு ஊழல் செய்வது புதிதல்ல என்பது தெரியும். ஆனால், மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா?மக்களிடம் இத்தனை கேள்விகள் எழும் வேளையில், வெற்று விளம்பரத்திற்காக இத்திட்டத்தை அரைகுறையாகச் செயல்படுத்த நினைக்கும் திமுக அரசை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
டிச 06, 2025 22:33

சுத்தி வளைச்சு கடைசியா 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்


Nandakumar Naidu.
டிச 06, 2025 22:30

கொள்ளையடித்த மக்களின் பணத்தில் திமுக விற்கு வாக்களிக்கும் கொத்தடிமைகளுக்கு சிறிது எலும்பு துண்டுகள் போட வேண்டாமா? அதான் சலுகைகள். அறிவில்லா ஹிந்து மக்கள் திருந்த வேண்டும்.


B.R. ANANTHARAM
டிச 06, 2025 22:20

how Rs.10000/- was given at the time of election.


சாமானியன்
டிச 06, 2025 22:03

புதிதாக வந்த வாக்காளர்கள் ஓட்டு விஜய்க்குத் தான் போகும் என்ற பயம் உள்ளது. காங்கிரஸ் யார் பக்கம் போனால் தனக்கு அதிக சீட் கிடைக்கும் என்ற ஆதங்கம். இப்போது லேப்டாப் தந்து கவரலாம். கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்.


Oviya Vijay
டிச 06, 2025 21:58

சுத்தி வளைச்சு கடைசியா 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்


கல்யாணராமன்
டிச 06, 2025 21:57

மனதில் நினைப்பு


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 06, 2025 21:55

தேர்தலுக்கு ஏழு மாசம் இருக்கும் வரை அரசு செயல்படாமல் இருக்க வேண்டுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை