உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்கவுட்ஸ் வைர விழாவில் ஜனாதிபதி பங்கேற்பாரா?

ஸ்கவுட்ஸ் வைர விழாவில் ஜனாதிபதி பங்கேற்பாரா?

சென்னை:இந்தாண்டு, சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழா கொண்டாடப்படுகிறது. இதை, தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறையில், வரும் 28ம் தேதி முதல், பிப்., 3 வரை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதில், 25,000க்கும் மேற்பட்ட, 'ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ்' மாணவ - மாணவியரும், இந்த இயக்கத்தை உருவாக்கிய பாடென் பெவல் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், பாரத் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் தேசிய முதன்மை கமிஷனர் கண்டேல்வால், தலைவர் அனில்குமார் ஜெயின் ஆகியோரை சந்தித்து, நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.பின், அவர்களுடன் சென்று, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, தமிழகத்தில் நடக்க உள்ள இந்த பெரிய நிகழ்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.இதனால், இதன் துவக்கவிழா அல்லது நிறைவு விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை