உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவினரின் தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்கவா பள்ளிக் கல்வித்துறை? அண்ணாமலை கேள்வி

திமுகவினரின் தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்கவா பள்ளிக் கல்வித்துறை? அண்ணாமலை கேள்வி

சென்னை: திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vwcbhcfh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தப்பவில்லை

நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை. இந்தப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?

பின்னணி என்ன?

இடிந்து விழும் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஏற்கனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கையில், தொடர்ந்து அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவதன் பின்னணி என்ன? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiMurugan Murugan
செப் 23, 2025 00:07

ManiMurugan Murugan அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கார் கட்சி தி மு கா கூட்டணிக்கு உண்மையில் தமிழக கல்வித்துறையின் செயல்பாடு என்ன என்பது தெரியுமா என்பதே சந்தேகம் தான் கல்வித்துறை அமைச்சர் அனைத்து வகையான கமிஷன் வாங்குவதில் தான் செயல்பாட்டில் உள்ளார் அவர் எதற்கு கல்வித் துறை யை ஏற்றார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது கல்வித் துறை யை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி தி மு கா கூட்டணியின் கமிஷன் துறை கட்டண உயர்வுக்கு கூட்டம் போட்டவர்கள் ஊழல் கட்சி தான் கட்சி தி மு கா கூட்டணியின்


adalarasan
செப் 22, 2025 22:08

தி.மு.க.வினருக்கு ஒரு17-18% சிறுபான்மையினரின் வோட்டு மொத்தமாக விழுது. ஆகையால் ஜெயிக்கிறார்கள்_ இல்லையென்றால் காலி.


Balamurugan
செப் 22, 2025 17:33

நீங்க கேட்பது சரி தான். திருடுனவனுக்கு சாய்ஸ் குடுக்குது உச்சநீதி மன்றம் குடும்பத்துக்கு சொத்தே செக்குறானுகலாமா அவனுகளோட பள்ளிகளுக்கு ஆள் சேர்க்க மாட்டானுகளா?


Balamurugan
செப் 22, 2025 17:27

எவனுக்கும் காது கேக்காது. காசு வாங்கிகிட்டு இந்தி சொல்லி குடுப்பானுக. தமிழக கூமுட்டைகள் ஓட்டுக்கு காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுவானுக. வெளியில தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டு போவானுக.


Balamurugan
செப் 22, 2025 17:25

தமிழகத்தில் ஒழுக்கமுள்ள அறிவார்ந்த அரசியல்வாதியாக இருக்கும் ஒரே தலைவர் இவர் தான்.


ராமகிருஷ்ணன்
செப் 22, 2025 17:05

எங்கே பொய்யின் பொய் மொழி, பதில் சொல்லுங்க. பித்தலாட்ட நடிகரின் ரசிகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இப்படி கேவலமாக தான் இருப்பானுக, மானங்கெட்ட விடியல் அரசு.


Saai Sundharamurthy AVK
செப் 22, 2025 17:04

அண்ணாமலை கேட்பது சரியான கேள்வி !


Chandru
செப் 22, 2025 16:25

ஓட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்


duruvasar
செப் 22, 2025 16:17

நியாயமற்ற கோரிக்கை. மகத்தான பணிகளை கவனிக்கவே நேரம் இல்லை அவருடைய துடிப்பை துல்லியமாக கணித்து தூய பணியை கொடுத்துருக்கிறது கட்சி மேலிடம்.


ponssasi
செப் 22, 2025 15:53

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.


புதிய வீடியோ