உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தக்க வைக்குமா தமிழக பா.ஜ.,?

தக்க வைக்குமா தமிழக பா.ஜ.,?

சென்னை: திருப்பரங்குன்றம் மலையை காக்க, பிப்ரவரி 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, ஹிந்து முன்னணி அறிவித்தது. முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு, ஆர்ப்பாட்டத்திற்கு ஹிந்து அமைப்புகளும், பா.ஜ.,வும் காட்டிய வேகத்தை பார்த்து, அதை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்திலேயே ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்க, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டத்திற்கு தமிழகம் முழுதும் இருந்து வந்து மக்கள் குவிய துவங்கினர். இதை தடுக்க முக்கிய நிர்வாகிகளை, அவரவர் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி செய்தது காவல் துறை. ஆனாலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று, நேற்று முன்தினம் மாலையில், பழங்காநத்தத்தில் ஹிந்து அமைப்புகள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தின. இடமும், நேரமும் முடிவான சில மணி நேர இடைவெளியில், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டது, ஹிந்து அமைப்புகளையும், பா.ஜ.,வையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதே நேரத்தில், பழங்காநத்தத்தில் திரண்ட கூட்டம் ஆளும் தி.மு.க.,வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட எழுச்சியை அறிந்ததும், பா.ஜ., மேலிட தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் எழுச்சியை தக்க வைக்க, திருப்பரங்குன்றம் முருகன் மலையை அபகரிக்க நடக்கும் முயற்சிகள் பற்றியும், சிறுபான்மை ஓட்டுகளுக்காக, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக, தி.மு.க., அரசு செயல்படுவது பற்றியும், தமிழகம் முழுதும் பிரசார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாவட்ட அளவில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தும் யோசனையும் உள்ளது. பழங்காநத்தத்தில் திரண்ட கூட்டத்தில் மிரண்டு போயிருக்கும் தி.மு.க., அரசு, ஹிந்து அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க, எதை வேண்டுமானாலும் செய்யும். அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

madhes
பிப் 07, 2025 10:55

மதப்பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கும்


VENKATASUBRAMANIAN
பிப் 06, 2025 08:03

ஊடகங்களில் பங்கு பெரும் பாஜகவினர் நன்கு விபரங்கள் தெரிந்து பேசவேண்டும். உளறக்கூடாது. ஒரு சிலரை தவிர் எல்லோரும் தரவுகளுடன் வருவதில்லை. ஆனால் திமுகவினர் பொய் தகவல்களை எடுத்து விடுகிறார்கள். அதை எதிர்த்து பேச நன்றாக தெரியவேண்டும். நெறியாளர் என்ற பெயரில் குறிக்கீடு செய்யும் போது தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டு அவர் உங்களை இடை மறிக்கும் போது பதில் சொல்லக்கூடாது. நெரியாளர் ஒரு திமுக அனுதாபி. அவர் திமுகவுக்கு தந்தான் பேசுவார். இதுதான் தமிழக ஊடகங்கள்


Oviya Vijay
பிப் 06, 2025 06:01

முருகன் மைண்ட் வாய்ஸ்: என்ன என்ன கோமாளித் தனம் எல்லாம் பண்ண முடியுமோ பண்ணுங்கடா... பார்க்குறதுக்கு ஜாலியா தான் இருக்கு... உங்க கட்சிக்குன்னு வேற வேலை வெட்டி ஏதாவது இருந்தா தான... இதுக்காக எல்லாம் நீங்க 2026 எலெக்ஷன்ல ஆட்சிக்கு வருவீங்க அப்படின்னு உங்களுக்கு வரம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஏன்னா அது நடக்காத ஒன்னு... என்ன புரிஞ்சுதா...


சமீபத்திய செய்தி