உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா

விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு,' என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது; ஏற்கனவே என்னுடைய ஐயத்தை நான் பதிவு செய்திருந்தேன். செங்கோட்டையன் தன் இயல்பாக கட்சியின் ஒருங்கிணைப்புக்கு போராடுகிறார் என்றால், அதனை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரை (செங்கோட்டையன்) பாஜ இயக்குகிறது என்றால், அது அதிமுகவுக்கு நல்லதல்ல, என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். ஐயப்பட்டதைப் போல, அவருக்கு பின்னால் பாஜ இருப்பதை, டில்லியில் அமித்ஷாவை அவர் சந்தித்ததன் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அதிமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, அதனை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8cpbdbma&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எடப்பாடி பழனிசாமி உள்பட பலருக்கும் என் மீது ஆத்திரம், எரிச்சல் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல், கூட்டணியில் இணைத்தாலும், தனித்து செயல்பட விடாமல், கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள். இபிஎஸால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, அமித் ஷாவும், நிர்மலா சீதாராமனும் எந்த துணிச்சலில் சந்தித்தார்கள். அப்படியென்றால், அதிமுக மற்றும் அதன் தலைவரை பற்றி என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்கள் அதிமுகவை நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அதிமுக, பாஜவோடு தான் கூட்டணி என்று முடிவெடுத்தால், அதற்கு அதிமுக தொண்டர்களே பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அவருக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

JANA VEL
செப் 11, 2025 14:41

இது அறிவாலயத்தில் எழுதி கொடுத்தது தானா இல்லை... மண்டபத்தில் வேறு யாராவது எழுதி கொடுக்கவில்லையே. யார் அங்கே? இந்த பிளாஸ்டிக் சேர் தருமிக்கு 6 MLA 1MP இடங்கள் கொடுங்கள்.


pakalavan
செப் 11, 2025 01:34

பாஜகா அதிமுகாவை கபலீகரம் செய்யுதுன்னு சொன்னதுதான்டா தலைப்பு செய்தியா வரனும்,


M Ramachandran
செப் 10, 2025 21:31

அப்புறம் இனி உட்கார பிளாஸ்டிக் சேர் கூட வழங்கப்படமாட்டாது.மனித கழிவு கலந்த போது அமைதியாக இருந்து விட்டு இப்போ ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை பார்த்தால் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல தெரியுதே.


Nagarajan S
செப் 10, 2025 20:39

திருமாவிற்கு எப்படியாவது பிஜேபி அதிமுக கூட்டணி உடையவேண்டும் என்று அளப்பரிய ஆசை.


VIJAY
செப் 11, 2025 10:03

100% உண்மை


Sun
செப் 10, 2025 18:57

திருமாவளவன் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணி பற்றி பேசும் போது எல்லாம் தி.மு.க வுக்காக பேசுகிறார் என்றே நினைத்தேன். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வேளையில் உள்துறை அமைச்சர் எவ்வளவு பிசியாக இருப்பார். அந்த நேரத்தில் அ.தி.மு.கவில் பதவி பறிக்கப் பட்ட செங்கோட்டையனை சந்திக்கிறார் என்றால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற ரீதியில் திருமாவளவன் சொல்லும் அ.தி.முகவில் குழப்பம் விளைவிக்க பா.ஜ முயல்கிறது என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.


Venkatesan Ramasamay
செப் 10, 2025 16:06

இவனை முதலில் ஷேவிங் பண்ண சொல்லுங்க ...


Ramalingam Shanmugam
செப் 10, 2025 16:30

அவங்க வீட்டுக்கு போகும்போது செய்து கொள்வான்


karupanasamy
செப் 10, 2025 14:12

எல்லாப்பக்கமும் கையை நீட்டுறார் ஒருவேளை அறிவாலயம் காட்டவில்லை என்றால் வேறு ஒன்றை இப்பொழுதே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என்று வாயை எல்லாப்பக்கமும் காட்டிக்கொண்டு இருக்கிறார்.


r ravichandran
செப் 10, 2025 12:53

எப்படியாவது அந்த கூட்டணி உடைய வேண்டும் என்ற திருமாவளவன் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Kjp
செப் 10, 2025 12:48

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


Sakshi
செப் 10, 2025 12:43

ப்ரெஸ்க்கிட்ட ஒன்னு சொல்லும், போய் சுடாலினை பாத்துட்டு வரும்.


முக்கிய வீடியோ