வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வயர் மேனின் வயிற்றுக்கு தீனி போட்டால்த்தான் கனெக்சன்.. பாவம் லஞ்ச நோயால் பாதிக்கப்பட்ட தமிழகம்.
லஞ்சம் வாங்கி நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுக்கிறார்.
கோடி லஞ்சம் கூட்டத்தை விட்டுட்டு ...ஆயிரம் இரண்டாயிரத்தை பிடித்து பிரோச்சனம் இல்லை
LANJAMM YELLAM ONNU THAN OKKK BROTHER intha lineman suthuuu adika pada vendumm
சில மாதங்களுக்கு முன்பு கோவை 103 F M ல் ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் திரு. வெள்ளிங்கிரி அவர்கள் பங்கு பெற்ற சாய்வு நாற்காலி நிகழ்ச்சி என நினைக்கிறேன்...... இவரின் உயர் அதிகாரி திருமதி. லத்திகாசரன்..... தனது பணிக்காலத்தில் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியை சொன்னார்..... வட இந்தியரான உயர் அதிகாரி ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு ஆய்வு செய்து அதன் அறிக்கை சமர்ப்பிக்க வந்தார்.... எல்லாம் முடிந்து அவர் செல்லும் போது ஒரு அன்பளிப்பை வம்படியாக அதை அவர் உதவியாளரிடம் கொடுத்து விடுகிறார்... டில்லியில் உள்ள தனது அலுவலக குடியிருப்பில் மூன்றாவது மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.... அந்த பார்சல் பிரித்து கூட பார்க்காமல் வீட்டு மேஜையில் இருக்கிறது...... கொடுத்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு கொடுத்து விடுகிறார்..... அங்கே உள்ள பக்கத்து வீடு மற்றும் சக அலுவலர்களிடம் இவரை பற்றி விசாரணை நடக்கிறது..... அனைவரும் லஞ்சம் வாங்க கூடிய நபர் அல்ல என்று சொல்ல..... மனுவை முடித்து வைக்க வேண்டும் ஆகவே தன் உயர் அதிகாரியிடம் விபரத்தை சொல்கிறார் ..... சோதனை செய்ய ஆடர் கிடைக்கிறது வீட்டின் மேஜை மீது அந்த பார்சல் உடைக்காமல் உள்ளது(பட்டு புடவை)..... இவரை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்க படுகிறது....... இரண்டு நாட்கள் கழித்து இவரின் அலுவலக ஊழியர்கள் ஆணையை எடுத்து வருவதை பார்த்த இந்த நேர்மையான வடநாட்டு அதிகாரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறார்...... சில நாட்களுக்கு பிறகு இந்த செய்தியை கேட்டு மனம் வருந்தி அழுகிறார் இந்த விசாரணை அதிகாரி..... லஞ்சம் கேட்பவர்களை மட்டும் அல்ல கேட்காதவர்களை கூட எப்படியாவது மாட்டிவிடும் உத்தமர்கள் உள்ளார்கள்....
லஞ்சம் வாங்குவதற்கு வக்காலத்து வாங்கும் பதிவுகள் மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது, ஏன் சம்பளம் வாங்கவில்லையா? மானம் கெட்டவர்களா அரசு மாறிவிட்டது லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க பாடுப்பட்டு கொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியாதா? மின்துறை நீங்கள் முதல் போட்டு நடுத்துகிறீர்களா? லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பதுபோல அதை ஆதரிப்பவர்களையும் குற்றவாளிகளாக கருத்தப்படவேண்டும், தினமலர் இந்தவிசயத்தில் மிக சிறப்பாகசெயல்படுகிறது வாழ்த்துக்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஒன்றும் சத்தியமான நியாய மான துறை இல்லை இந்த துறையை பயன்படுத்தி பல சொந்த காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.... எனக்கு தெரிந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளவர் அவர் தன் மகனை படிக்க வைத்து போட்டி தேர்வில் வெற்றி பெற்று இந்த லஞ்சம் ஒழிப்பு துறையில் சேர்ந்தார்.... நீ லஞ்சத்தை வளர்கிறாய் உன் மகன் அழிக்க போகிறாரா என நண்பர்கள் கேலி செய்தார்கள் மற்றோரு புறம் இந்த துறையில் நடக்கும் பாகுபாடுகளை பார்த்து வெறுத்து போன மகன் வேறு நல்ல பசையாக வருவாய் வரக்கூடிய துறைக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்....
அரசு அலுவலகத்தை விட தனியார் துறைகளில் லஞ்சம் கொடிகட்டி பறக்கிறது..... கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் குழந்தைகளை தனியார் பள்ளிக் கூடத்தில் படிக்க வைப்பது அதுபோக தனியாக டியூஷன் வைப்பது , ஆசை பட்ட கல்லூரியில் அதிக நன்கொடை கொடுத்து சேர்த்து விடுவது, சொந்த வீடு, மனைவிக்கு நகை வெள்ளி பாத்திரங்கள், பயணிக்க இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று என்றாவது ஒருநாள் நினைத்து பார்த்தது உண்டா?
கம்பத்தில் இருந்து வீடு வரை ஒயரை இழுத்து இணைப்பு தருவது மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட லைசென்ஸ் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.... கட்டணங்கள் மற்றும் வேலைக்கு லஞ்சம் பேக்கேஜ் ஆக மொத்தமாக அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துவிடுவார்கள் அவர்கள் பார்த்து பிரித்து கொள்வார்கள்..... வெயிலில் வேலை பார்க்கும் நபர்களுக்கு குறைவாக பங்கு தருவார்கள் அதிகாரியிடம் பேசி அதிகமாக வாங்க முடியாது.... வயதான ஆறுமுகசாமியால் மரம் ஏறுதல் முடியாது தனியாக கூலிக்கு ஆள் வைத்திருப்பார் அவருக்கும் கொடுக்க வேண்டும் அதுதான் விடாப்பிடியாக ரூ.2,000/- கேட்டு இருப்பார்.... யார் பேச்சை கேட்டு தரகர் சண்முக சுந்தரம் மாட்டி விட்டாரோ தெரியவில்லை. லஞ்சம் மட்டும் இல்லாவிட்டால் மாட மாளிகை , உயரமான கட்டிடங்கள் எவ்வித அனுமதியின்றி கட்டி பல மின் இணைப்புகளை பெற சாத்தியம் இல்லை.
கெரகத்த இந்த லைன் மேனைப் பிடித்து என்ன சாதித்து இந்த விசாலாட்சி? இனி அந்த பிடித்து கொடுத்த ஆள் வூட்டுக்கு இந்த சென்மத்தில் கரண்ட்டு வராது.லஞ்சம் குடுத்ததும் அதை மறைந்திருந்து பிடித்ததும் மாபெரும் குற்றம் இதெர்க்கென்ன தண்டனை?
யாருங்க இந்த விசாலாட்சி அம்மணி?
அரசு வேலை கொடுத்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் ஏன் இந்த மீன் வேலை பத்தாது என்பவர்களுக்கு ஒருபோதும் பத்தாது கம்யூனிஸ்ட் அரசு உரிமைகள் அத்தனையும் கேட்பார்கள் ஆனால் லஞ்சம் வாங்காதே அப்பொழுதுதான் உன்னோட மரியாதை இருக்கும் என்று யாரும் சொல்வதில்லை
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!
12-Jul-2026