உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காது, கழுத்துல நகை இருந்தா மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது அமைச்சர் கிண்டலால் பெண்கள் எரிச்சல்

காது, கழுத்துல நகை இருந்தா மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது அமைச்சர் கிண்டலால் பெண்கள் எரிச்சல்

சாத்துார்: “காது, கழுத்துல நகை இருந்தால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது,” என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், பெண்களிடம் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே என். சுப்பையாபுரம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, முள்ளிச்செவல் பகுதிக்கு சென்ற அவர், அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.அப்போது அங்கு வந்திருந்த பெண்கள் அமைச்சர் ராமச்சந்திரனிடம், தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என, முறையிட்டனர். அப்போது, அவர்களில் ஒரு மூதாட்டியின் காதில் கம்மல் அணிந்திருந்ததை பார்த்த ராமச்சந்திரன், அதை சுட்டிக்காட்டி, ''இப்படி காது, கழுத்துல நகை போட்டு வந்து உரிமை தொகை கேட்டீங்கன்னா கிடைக்காது,” என்றார்.மேலும், “ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், காதுல கம்மல் இருக்கு; கழுத்துல செயின் இருக்கு என்று ரிப்போர்ட் எழுதி விடுவர். பிறகு எப்படி உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்,'' எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.'கஞ்சிக்கே வழி இல்லை' அதற்கு அந்த மூதாட்டி, ''காதுல இருக்கிற இந்த கம்மல் மட்டும் தான்யா என்கிட்ட இருக்கு; கஞ்சிக்கு வழியில்லை; வேணும்னா கழட்டிக்கங்க. எனக்கு உரிமைத் தொகை தாங்க'' என்றார். உடனே, ''கொடுக்க சொல்வோம்'' என பதிலளித்தபடியே, அங்கிருந்து ராமச்சந்திரன் புறப்பட்டுச் சென்றார்.இதையடுத்து, “தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை கடந்த 50 மாதங்களாக வழங்கி வருவதாக தி.மு.க., அரசு கூறி வரும் நிலையில், 'கஞ்சிக்கே வழி இல்லை' என கூறிய அந்த மூதாட்டி, தமிழக அரசு வகைப்படுத்திய தகுதி பட்டியலில் இல்லையா?” என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.பா.ஜ., கண்டனம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:பெண்களிடம், 'மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால், 1,000 ரூபாய் கொடுக்க மாட்டோம்' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறியது, அரசியல் நாகரிமகற்ற செயல். 'அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை' என வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சியில் அமர்ந்ததும், 'தகுதியான பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை' என, பாதி பெண்களை பட்டியலில் இருந்து தி.மு.க.., அரசு நீக்கியது. இப்போது, 'நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது' என மீதி பெண்களையும் விரட்ட பார்க்கிறது.ஏற்கனவே, 'ஓசி' எனவும்; '1,000 ரூபாயில் கிரீம், பவுடர் எல்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க' எனவும்; பணம் வரவில்லை என்ற பெண்களை, 'மெண்டல்' எனவும், நாக்கில் நரம்பின்றி, தி.மு.க.,வினர் வசைபாடுகின்றனர். இதை இனியும் அனுமதிக்க முடியாது. பெண்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Tamilan
ஆக 23, 2025 12:28

திமுகவுக்கு உள்ள புகழைப்பார்த்து இந்துமதவாதிகளின் வயிற்றெரிச்சல் . அரசை எதிர்க்க ஒரு விஷயமும் கிடைக்கவில்லை . பல் குத்த திரும்பாவது கிடைக்குமா என்று ராப்பகலாக அலைகிறார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 12:46

திமுகவின் புகழ் திருபுவனத்தில் தெரிந்ததே


Tamilan
ஆக 23, 2025 15:18

தாய்லாந்தில் குஜராத்தில் மற்ற பாஜ ஆளும் மாநிலங்களில் தெரிவது எல்லாம்


ramesh
ஆக 23, 2025 12:00

ஸ்டாலினுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை . அவருடைய கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் வாய் தான் முதல் எதிரி


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 11:06

எங்க வூட்டுக்கு பக்கத்துல ஒரு வூட்டுல காரு ரெண்டு ஸ்கூட்டர் நாலு சைக்கிள் எல்லாம் இருக்கு. மாசம் ரெண்டு லட்சம் வருமானம் வருது. வட்ட செயலாளரு சிபாரிசு அன்பளிப்பு இல்லாமலா செஞ்சதும் மாசம் ஆயிரம் அரசாங்கம் கொடுக்குது.


R.MURALIKRISHNAN
ஆக 23, 2025 11:03

எல்லாத்தையும் புடுங்கி எடுத்துட்டு உதவி தொகை கொடுப்பதில் திராவிட மாடல் சிறந்தது என்பது இப்போது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்


JAGADEESANRAJAMANI
ஆக 23, 2025 10:53

என் இப்படி அமைச்சர்கள் நாகரீகம் இல்லாதவறுகளாகிறீர்கள் .இதற்கு தேர்தலில் பதில் கிடைக்கும்


Anbuselvan
ஆக 23, 2025 10:18

காது, கழுத்துல நகை இருந்தா மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது அமைச்சர் கிண்டலால் பெண்கள் எரிச்சல் ஆனாலும் நாங்கள் இவர்களுக்குத்தான் வோட்டு போடுவோம். இதேபோல ஹிந்து மதத்தையும் தெய்வங்களையும் பழிப்பவர்களுக்குதான் நாங்கள் ஹிந்துவாகவும் தெய்வ பக்தி உடையவர்களாக இருந்தாலும் இவர்களுக்குத்தான் வோட்டு போடுவோம். எங்கள் வோட்டு போடும் ரகசியத்தை எந்த ஒரு வாக்களிப்பை ஆராயும் நிபுணராலேயும் கணிக்க முடியாது. தமிழன்டா.


Rajan A
ஆக 23, 2025 09:56

கழுத்தில் போட்டுருக்கும் கொஞ்சம் நகை கண்ணை உருத்தியிருக்கு. அதையும் டாஸ்மாக் மூலம் எடுத்து விடலாம்


Nagarajan D
ஆக 23, 2025 09:52

அறிவு கிரிவு ஏதாவது இருந்தா தி மு க வில இருப்பார்களா


krishna
ஆக 23, 2025 08:29

MAFIA DRAVIDA MODEL KUMBAL OORAI ADITHUULAYIL POTTU KANDADHAYUM AATAYA POTTU KODISWARARGAL.MAKKALAI PICHAI EDUKKUM NILAYIL VAITHULLADHUDHAAN DRAVIDA MODEL SAADHANAI.INDHA MAFIA KUMBALUKKU VOTTAI VIRKKUM TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.


Padmasridharan
ஆக 23, 2025 08:23

ரேஷன்ல கொடுக்கிற பொருட்களால வயிறும் நிறையப் போகறதில்ல, மக்களிடமிருந்து வரிப்பணத்தை வாங்கி பெண்களுக்கு கொடுப்பதனால இவங்க கர்ணனாகப் போறதுமில்ல சாமி. கொடுக்கற அந்த பணத்ததான் மதுக்கடைகள்ல புடுங்கி எடுத்துக்கறாங்க


சமீபத்திய செய்தி