உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்தோ, அனுமதியோ பெண்கள் பெற தேவையில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாஸ்போர்ட் கோரி மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் செய்ததாகவும், நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரித்த போது கணவர் கையெழுத்து பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்ததாகவும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து வழக்கு நடப்பதால் கணவர் கையெழுத்தை வலியுறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ' பாஸ்போர்ட் பெற கணவர் அனுமதி, கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை. கையெழுத்து வாங்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் பெண்களை கணவனின் உடமையாக கருதும் சமூகத்தின் மனப்பான்மையை அதிகாரி பிரதிபலிக்கிறார். கணவருடன் பிரச்னை உள்ள நிலையில் கையெழுத்து பெறுவது இயலாது. திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை. கணவனின் அனுமதி, கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்க முறையை காட்டுகிறது. மனுதாரரின் கோரிக்கையை நான்குவாரத்தில் பரிசீலனை செய்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜூன் 20, 2025 21:00

அப்படி தேவைப்பட்டாலும், இந்தக்காலத்து பெண்கள், கணவனின் கையெழுத்தை forgery செய்து போட்டுக்கொள்வார்கள்.


GMM
ஜூன் 20, 2025 19:34

பாஸ்போர்ட் பெற ரேவதி பெயரில் கணவர் பெயர் இணைந்து பதிந்து இருந்தால், கணவர் அனுமதி, கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை என்று பாஸ்போர்ட் விதி உள்ளதா? கையெழுத்து விதி இருந்தால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வழக்கு தொடுக்க வழக்கறிஞர், ரேவதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆஜர் ஆக சம்மன் அனுப்ப வேண்டும் . ரேவதி பாஸ்போர்ட் மண்டலத்தில் உள்ள address proof, போலீஸ் சான்று கொடுக்க வேண்டும். அதில் கணவர் பெயர் இருந்தால், அவர் கையெழுத்து தேவை. ? விவகாரத்து வழக்கு விவரம் நீதி மன்றத்தில் பெற்று கணவர் பெயர் நீக்க அனுமதி பெற வேண்டும். நீதிபதி தனக்கு தோன்றிய தீர்வை கூற முடியாது. பல நூறு நீதிமன்றங்கள் உள்ளன. விதியை பின்பற்றி தீர்வு காண மட்டும் தான் நீதிபதி பணி விதிகள். பாஸ்போர்ட் வழங்கிய பின் ரேவதிக்கு வெளிநாட்டில் பாதுகாவலர் மத்திய அரசு? நீதிமன்றம் அல்ல.


தாமரை மலர்கிறது
ஜூன் 20, 2025 18:51

பதினெட்டு வயதிற்கு மேல் அனைவரும் அடல்ட் தான். மனைவி கொலை செய்தால், கணவனுக்கா தண்டனை ? பாஸ்போர்ட்டுக்கு கணவனின் அனுமதி தேவை என்பது இஸ்லாமிய நாடுகளின் சட்டம். இந்தியாவில் இதற்கெல்லாம் இடமில்லை.


(க்)குசு (க்)குண்டி
ஜூன் 20, 2025 18:48

இனி பெண்களுக்கு பசித்தால் உணவு உட்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்க வேண்டும்.


SUBBU,MADURAI
ஜூன் 20, 2025 18:16

அப்படியே ஆண்கள் பாஸ்போர்ட் பெற மனைவியின் அனுமதி கட்டாயம் என்று தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும். நீதிபதிகளை விமர்சிக்க கூடாது ஆனால் அவர்கள் கொடுக்கும் தீர்ப்புகள் விசித்திரமானவை என்பதில் எந்த ஐயமும் இல்லை!


சாரதி
ஜூன் 20, 2025 18:39

மாண்பு மிகு நீதிபதி அவர்களின் தீர்ப்பு மிக சரியானது. இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தனிமனித உரிமைகள் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது,கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள், தாய், தந்தை மற்றும் நண்பர்கள் உட்பட யாரும் தலையிட முடியாது. மிகச் சிறந்த தீர்ப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை