உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வறை இன்றி பெண் டாக்டர்கள் அவதி: பாதுகாப்பும் கேள்விக்குறி என குற்றச்சாட்டு

ஓய்வறை இன்றி பெண் டாக்டர்கள் அவதி: பாதுகாப்பும் கேள்விக்குறி என குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு மருத்துவமனைகளில் ஓய்வறை இல்லாமலும், இருபாலின கழிப்பறை முறையாலும் அவதிப்பட்டு வருவதாக, பயிற்சி பெண் டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் வார்டில், முதுநிலை பயிற்சி டாக்டர்கள் தான் பெரும்பாலும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அசோசியேட் பேராசிரியர்களுக்கு தனித்தனியாக, அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், 10 முதல் 14 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பணியாற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஓய்வறை ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கூறியதாவது:சில அரசு மருத்துவமனைகளில், பயிற்சி டாக்டர்களுக்கு ஓய்வறை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் ஒரே அறை மற்றும் கழிப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது. சில அரசு மருத்துவமனைகளில் அவை கூட இல்லாமல், நோயாளிகள் வார்டிலேயே பயிற்சி டாக்டர்கள் சாப்பிடுவது முதல் ஓய்வெடுப்பது வரை நடைபெறுகிறது. உள்நோயாளிகள் பிரிவில், இரவில் பணியாற்றும் பெண் டாக்டர்கள் அசதியில் ஓய்வெடுக்க நினைத்தாலும், முறையான ஓய்வறை இல்லாமல் அவதிப்படுகின்றனர். சில அரசு மருத்துவமனைகளில் ஓய்வறை ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக பராமரிக்காமல், கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே, தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி டாக்டர்களுக்கு, ஆண், பெண் என தனித்தனியாக ஓய்வறை ஒதுக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய பரிந்துரைப்படி, 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டிருந்தாலும், செயல்படாத நிலையில் இருப்பதால் டாக்டர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gopal Naidu
செப் 24, 2024 09:05

காலதாமதம் இன்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2024 11:33

இதே போன்று பெங்களூரில் மஹாராணி க்ளஸ்டர் யூனிவர்சிட்டி என்று விதான சவுதா அருகில் பெண்களுக்கேயான யூனிவர்சிட்டி உள்ளது , அங்கே பணிபுரியும் பெண் பேராசிரியர்கள் முதல் மாணவிகள் வரை உள்ள கழிவறைகள் அவர்களுக்கு நோயை பரப்பும் தளமாகவே உள்ளது , இதனை எந்த பத்திரிக்கைகளும் வெளியிடமாட்டார்கள்


RSaminathan - Thirumangalam
செப் 23, 2024 09:49

கார் பந்தயத்தை விட இது மிக முக்கியமானது. ஆனால் நமக்கு எது நேரம் ?


ديفيد رافائيل
செப் 23, 2024 08:54

பிரச்சினையாகும் போது மட்டுமே கவனிப்பாங்க போல


RAMAKRISHNAN NATESAN
செப் 23, 2024 08:50

மூர்க்கம் பெண்களை இழிவுறுத்தும் மார்க்கம் .... அடிமை போல பாவிக்கும் மார்க்கம் ..... அதை அப்படியே பிசகாமல் நிறைவேற்றுவதை தலையாய கடமையாக பார்க்கும்மாநிலங்கள் மேற்குவங்கம், தமிழகம், கேரளா .....


Barakat Ali
செப் 23, 2024 07:20

முன்னேறிய மாநிலம் ....... முன்னுதாரண மாநிலம் ........


Kasimani Baskaran
செப் 23, 2024 05:42

ஒய்வு என்பது அவசியம். ஓய்வறை என்பது பெண் மருத்துவர்களுக்கு கண்டிப்பாக அவசியம். முன் தங்கிய மாநிலத்தில் அது கூட இல்லை என்பது வெட்கக்கேடு. வேலை செய்யாத காமிராக்களை குப்பையில் வீசி வேலை செய்யக்கூடியதை இணைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை