உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்போடியா, வியட்நாம், லாவோஸ் நாடுகளில் கொடுமை; எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் நாடுகளில் கொடுமை; எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கம்போடியா, வியட்னாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் இப்போது கம்ப்யூட்டர், டைப்பிங் போன்ற வேலைகளை தெரிந்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, சைபர் குற்றங்களை செய்யும் பணிகளில் வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதற்காக, அவர்களின் அக்கவுண்ட் நம்பரை பயன்படுத்துகிறார்கள்.தமிழகத்தில் உள்ள விதவிதமான நம்பர்களையும், பேங்க் அக்கவுண்ட்டுகளையும் பயன்படுத்தி மோசடி செய்த பணத்தை போட்டு, அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நடந்து கொண்டு இருக்கிறது.மொத்தம் 1,185 பேர் கம்போடியா, லாவோஸ் நாடுகளில் வேலைக்குப்போன இளைஞர்களின் விபரங்கள் தெரியவில்லை என்கிறார்கள். அவர்களில் 166 பேரை டிரேஸ் பண்ணவே முடியவில்லை. அங்கு போன பிறகு அங்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. எனவே லாவோஸ், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த நாடுகளுக்கு வேலைக்காக இளைஞர்களை அனுப்பி வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சொல்லும் அடிப்படையில், வெளிநாடுகளில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இளைஞர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தவே உங்களை அழைத்துச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த வீடியோவில் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

gvr
அக் 05, 2024 17:21

Useless and ineffective when in service. Now giving unsolicited advice.


Lion Drsekar
அக் 05, 2024 16:11

எங்காவது வேலைக்குப் ஆனால் கொடுமை இங்கு இருந்தாலே மன்னிக்கவும் ஒரு ஜாதியில் பிறந்து ஏழையாக இருந்து, அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிக்கும் நிலையிலும் அவர்களை வேரோடு எங்குமே வாழ்ந்துவிடக்கூடாது என்ற நிலையில் தினம் இனம் பல இயக்கங்களின் வாயிலாக , காதுகொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு பேசுவதும், அழிப்பதும் முழுநேர வேலையாகச் சேய்துகொண்டு வரும் கூட்டத்திடம் இருந்து காக்க நீதித்துறையும் கைகட்டி, வாய்பொத்தி இருப்பதால் இவர்களுக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ஹிரண்யாய நமஹ


அப்பாவி
அக் 05, 2024 16:08

அப்பிடி வேலைக்கு அனுப்பி வெச்சவங்களை கைது செஞ்சு என்ன பிரயோஜனம்? ரெண்டு பேரையாவது போட்டுத் தள்ளினாத்தானே அடுத்து வர்ரவன் பயப்படுவான்? அதுசரி. நம்மளை விட நல்லா இருக்கிற நாட்டுக்கு வேலைக்குப் போகணும். நம்மளை விட தரித்திரம் புடிச்ச நாடுகளுக்கு எவனாவது வேலைக்குப் போவானா? தமிழன் தத்தின்னு புரியுது.


Kannan Chandran
அக் 05, 2024 14:39

கடைசி பதவிக்காலத்தில் இருந்த போது, அடுத்து TNSPC தலைவர் பதவி கிடைக்கும் என்ற பேராசையில், விடியலுக்கு ஜால்ரா மட்டும் போட்டுக்கொண்டிருந்த யோக்கியர், வாரம் ஒரு அறிக்கை விட்டது, சைக்கிள் ஓட்டியது, கஞ்சா ஆபரேசன் 1,2 &3 என பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தது தவிர இவர் செய்தது ஒன்றுமல்ல..


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 14:14

கவலைப்படாதீங்க ......... நாங்கள் திராவிட மாடலிடம் மட்டும் தான் ஏமாறுவோம் ......


Sridhar
அக் 05, 2024 13:46

அந்த குறிப்பிட்ட நாடுகளை விட தாய்லாந்தில்தான் இவ்வகையான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. போலீசில் அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவருக்கு இந்த விசயம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் க்ரிப்டோ சம்பந்தப்பட்ட விசயங்கள் திருட்டு கும்பலுக்கு தெரிஞ்சதுன்னா ரொம்பவே வசதியா போயிரும். அப்புறம் பென்டியம் 1 ரேஞ்சுல பிணவறையிலெல்லாம் பணத்தை ஒளித்துவைக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை ஏற்கனவே தெரிஞ்சிருக்குமோ, அதுனாலதான் தைரியமா மோடியை எதித்து பேசறானுங்களோ? கெஜ்ரிவாலை போல தைரியமாக எங்கள் வங்கிக்கணக்கிலிருந்து ஏதாவது பணமிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததான்னு சவால் விடுவானுங்க. அதுனால, எச்சரிக்கை கொடுக்கறேங்கற பேர்ல தகவல்களை பரிமாறாமல் இருந்தா சரி.


Ramesh Sargam
அக் 05, 2024 13:32

இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகவேண்டும். அப்பத்தான் நமது நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார்கள்.


suresh guptha
அக் 05, 2024 16:16

WHEN COMPARE TO WORK IN COMBODIA OR OTHER COUNTRIES, WHICH HAS BEEN MENTIONED,IT IS BETTER TO BE WITH SAMSUNG


புதிய வீடியோ