உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக 'லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தேமுதிக.,வின் தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்தின் நினைவிடத்தில் தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 'லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ponssasi
மே 03, 2024 19:29

பகுத்தறிவு சமாதியில் பஜனை பாடுவதும், தயிர் வடை படைப்பதும், இறந்தவர் முரசொலி படிப்பதும் உலக சாதனை இல்லையா? அரசின் பிரதிநிதியாக பாரதி அவர்கள் ஐநா மன்றத்தில் முறையிடுவார் அன்னமிடுவதில் விஜயகாந்திடம் கருணாநிதி, ஜெயலலிதா அண்ணா மூவரும் தோற்றுப்போனார்கள்


Suppan
மே 03, 2024 16:37

லிங்கன் என்ற பெயரைப்பார்த்து எதோ அமெரிக்க நிறுவனம் என்று நினைத்து விடாதீர்கள் இது நம்ம குரோம்பேட்டையிலதான் இருக்கு


Natarajan Ramanathan
மே 03, 2024 16:09

வேறு ஒரு மூதேவி இருக்கும்வரை அரசு நிலங்களை ஆட்டயப்போட்டது செத்தபின்பும் ஆறு அடி நிலத்தை ஆட்டயப்போட்டது


Srinivasan Krishnamoorthi
மே 03, 2024 14:59

செத்தும் கொடுத்தார் சீதக்காதி வள்ளல் விஜயகாந்த்


மொட்டை தாசன்...
மே 03, 2024 14:57

அரசியலில் அவர் நிலைத்திருந்தால் பல சாதனைகளை படைத்திருக்கக்கூடும் அரசியல் சூட்சுமம் தெரியாததால் அரசியலில் அவரால் நிலைத்திருக்கமுடியவில்லை இன்றைய அரசியலில் விஜயகாந்த் போலுள்ளவர்கள் நிலைத்து நிற்பது கடினம்


ஆரூர் ரங்
மே 03, 2024 14:39

அன்றாடம் தயிர் வடை படையல் பெறும் சமாதியும் இடம் பெற வேண்டும். அதுதான் நடுநிலை. பகுத்தறிவு.


சசிக்குமார் திருப்பூர்
மே 03, 2024 15:44

தயிர்வடைக்கு அந்த விருது வேண்டும் என்று உபீஸ் பெட்டியுடன் அந்த நிறுவனத்தை இன்னேறம் அணுகி இருப்பர்


Nallavan
மே 03, 2024 13:56

ஏழைகளின் பசிபோக்கி நல்வாழ்வினை வழங்கிடும் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு நன்றிகலந்த நல்வாழ்த்துக்கள்


Parameswar Bommisetty
மே 03, 2024 13:17

நல்ல ஆத்மா


V RAMASWAMY
மே 03, 2024 13:03

கேப்டன் இருந்தும் சாதனை படைத்தார், இறந்தபின்பும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்


மேலும் செய்திகள்