உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூலி வெற்றி பெற திருநள்ளாரில் பூஜை

கூலி வெற்றி பெற திருநள்ளாரில் பூஜை

காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு கோவிலில், ரஜினி மகள் ஐஸ்வர்யா, 'கூலி' படம் வெற்றியடைய தந்தை பெயரில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜை செய்தார்.புதுச்சேரி மாவட்டம், காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். நேற்று முன்தினம், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, சனிபகவான் கோவிலுக்கு வருகை தந்தார்.பின், சிவன், அம்பாள், முருகர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நடந்த சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்றார். அப்போது, 'கூலி' திரைப்படம் படம் வெற்றிபெற, தந்தை ரஜினி பெயரில் சிறப்பு பூஜை செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டார். தொடர்ந்து கோவில் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rathna
ஜூலை 07, 2025 15:47

தமிழன் கோமாளி நடிகர்களின் கட் அவுட்க்கு பாலை ஊற்றி தனது குடும்பத்தின் அடுப்பில் மண்ணை போடுகிறான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:16

என்ன முடிவு தெரிஞ்சுது ?


Narayanan
ஜூலை 07, 2025 11:50

இறைவன் அளிக்கும் கூலியை தடுக்க முடியாது .


THOMAS LEO
ஜூலை 07, 2025 11:10

YES Boss.


ram
ஜூலை 07, 2025 10:25

Is this very important news


BALOU
ஜூலை 07, 2025 10:11

இவர்களால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை


Arul Narayanan
ஜூலை 07, 2025 09:37

குடும்பம் பிள்ளை குட்டிகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்ட மாட்டார்களா?


பேசும் தமிழன்
ஜூலை 07, 2025 08:59

ஏம்மா நீங்கள் இரண்டு பேரும்.. அவரை வைத்து படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கார்ட்டூன் படம் எடுத்து.. அவரது பெயரை கெடுக்காமல் இருந்தாலே போதும்.. அவரது படம் தானாக ஓடும்.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக திகழ்கிறார்... அவரது பெயரை கெடுக்க வேண்டாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 09:24

சூப்பர், இன்றைய அலங்கோல ஆட்சி அமைவதற்காக கூலி வாங்கிக்கொண்டு இதைவிட பரவாயில்லை என்று சொல்லும் அளவு இருந்த ஆட்சியை வரவிடாமல் செய்தவர்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 08:41

திருபுவனத்து அநியாயத்துக்கு வாயத்தொறந்தா கிளவுட் 9, ரெட் ஜெயண்ட் ,சன் கலைஞர் குழுமக் கோபத்துக்கு ஆளாகிடுவோம். ஆனா திருநள்ளாறு வந்து எங்களுக்கு இருக்குற காசு கஞ்சி குடிக்கவே பத்தலை ,கஞ்சிக்கு உப்பு வாங்க காசு கொடு சாமின்னு வேண்டிக்குவோம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 08:34

ஆண்டவனே வந்தாலும் இந்த குடும்பத்தை திருத்த முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை