உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு மறுமதிப்பீடு விண்ணப்பிக்கலாம்

தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு மறுமதிப்பீடு விண்ணப்பிக்கலாம்

போடி:தமிழகத்தில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர், சுருக்கெழுத்தர், கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கான மறு மதிப்பீடுக்கான தேர்வு தாள் நகல் பெற நவ., 13 க்குள் விண்ணப்பிக்கலாம்.ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், (டைப்ரைட்டிங்) சுருக்கெழுத்தர், (சார்ட் ஹேண்ட்) சி.ஓ.ஏ., கணக்கியல் தேர்வுகள் நடைபெறும். ஆக., நடந்த இத்தேர்வுகளின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின.தேர்வுகளில் கலந்து கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகள், தனித்தேர்வுகள் மறுமதிப்பீடுக்கான தேர்வு தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் tndtegteonline.inஎன்ற link - ல் இணைய வழி மூலமாக நவ., 7 முதல் விண்ணப்பம் செய்யலாம். இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்திட நவ., 13 கடைசி நாள்ஆகும். ஒன்றுக்கு மேல் கூடுதலான பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். நகல் கோரும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 வீதம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.விடைத்தாள் டிச., இறுதிக்குள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படும்.மறு மதிப்பீட்டிற்கான அட்டவணை, தேர்வு முடிவு தொடர்பான விபரங்கள் இயக்ககம் dte.tn.gov.inமற்றும் tndtegteonline.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தொழில் நுட்ப இயக்ககம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ