உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்

‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்,” என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுாரில், கனவு இல்ல திட்ட பணிகளுக்கு உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று பேசியதாவது:ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.

பழமையான தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கும், முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் கிடையாது. மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும், ஒருசிலர் விடுபட்டிருக்கின்றனர். அப்படி உள்ளவர்களுக்கு முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார். ஜூன் 4ம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கின்றனர். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
ஏப் 28, 2025 08:54

இந்தப்பணத்தையெல்லாம் நம்பி ஓட்டுப்போடுறவன் அந்த மாநிலத்தில் இருக்கான் ன்னா அந்த மாநிலத்தை முன்னேறிய மாநிலம் ன்னு எந்தக்கூமுட்டை சொல்லுவான் ????


Barakat Ali
ஏப் 28, 2025 08:52

சனங்க மொத்தமும் எங்கிட்டே கையேந்தி நிற்கணும். அதுதானுங்கோ சுயமரியாதை.. அதுதானுங்கோ பகுத்தறிவு....


சுரேஷ் பாபு
ஏப் 28, 2025 07:53

இப்போது மீண்டும் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள் என்றால் முன்னர் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தவறுதானே. அப்போது அவர்களுக்கு பழைய தேதியில் இருந்து அரியர்ஸ் தொகையுடன் கொடுக்க வேண்டும். அதுதானே நியாயம்?


பிரேம்ஜி
ஏப் 28, 2025 07:09

அது என்ன தகுதி! வெளிப்படையாக தெளிவாக இதுவரை அறிவிக்கவில்லை! கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை தேவையா? ஆதார் கார்டு ரேஷன் கார்டு போதுமா?


ஆதிநாராயணன்
ஏப் 28, 2025 06:58

இது ஒரு ஏமாற்று வேலை இதுவரை தகுதியான பலருக்கு கிடைக்கவில்லை தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் என்று அறிவித்தனர் பொய்யான வாக்குறுதியால் வெற்றி பெற்றதும் தகுதியை இடையில் நிறுத்தி ஏமாற்று வேலை செய்கின்றனர் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணி படு தோல்வி அடையும்


மனி
ஏப் 28, 2025 02:57

இரு இரு இருக்குத 2026 ல் ல


vijai hindu
ஏப் 28, 2025 13:04

மணி சார் நீ நினைக்கிற மாதிரி நடக்காது பாருங்கள் மீண்டும் கேடுகெட்ட ஆட்சிக்கு தான் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள்


ManiK
ஏப் 28, 2025 02:47

தேர்தலுக்கான நாடகம் ஆரம்பிச்சாச்சு. முதல்வர் துதிபாடும் இந்த மந்திரி தேவையில்லாமல் மக்களுக்கு ஆசைகாட்டி மோசம் மட்டுமே செய்வார். எந்த மாநிலத்துலையும் இல்லாத அளவுக்கு பொய் போலி பிம்பம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை