உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில், நீங்கள் நீங்கள் தான் வெட்கி தலை குனிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பதிலளித்து உள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xmllkb0k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.இதற்கு பதிலளித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் முதல்வர் ஸ்டாலின்!யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?*அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!*#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!* அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க ,மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

D.Ambujavalli
மே 14, 2025 03:21

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை எந்த ஆட்சிக்காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை இத்தனை வாய் கிழிகிறவர், தங்கள் துணை சபாநாயகரின் வாரிசை வெகு சாமர்த்தியமாக தப்பித்து வைத்தாரே அதே கதைதான் இன்றைய ஆட்சியின் ‘சாரை’ அண்டங்காத்து காப்பாற்றுவதும்


Prabakaran
மே 13, 2025 22:19

இதை பார்த்தவுடன் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது.. மேகல மணிமேகலை உண்மையை ரெண்டு பேரும் போட்டி போட்டு சொல்றாங்க.. இதுல ஒருத்தரை யாருன்னு முடிவு பண்ணு..


நிக்கோல்தாம்சன்
மே 13, 2025 22:14

சோறு சாப்பிடுறவங்களுக்கு தான் வெக்கம் மானம் எல்லாம் , நீங்க என்னடான்னா ? கட்சி கொடி கட்டியிருந்தா போதும் அந்த "சார்களுக்கு " என்று தலைகுனியும் பழக்கமே இல்லை


Haja Kuthubdeen
மே 13, 2025 22:02

சரியான பதிலடி..பொள்ளாச்சி கூட்டத்தை உள்ளே போட்டதும்...சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டதும் எடப்பாடி ஆட்சிதானே..வழக்கம் போல ஸ்டிக்கர் ஒட்டுனா எப்படி???


sridhar
மே 13, 2025 21:37

ஒரு வகையில் சரி. எடப்பாடி ஆட்சியில் நடந்த இந்த கொடுமைக்கு உடனே சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது . ஆனால் திமுக ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சார்கள் மீது ஒரு சாதாரண விசாரணை கூட கிடையாது.


rama adhavan
மே 13, 2025 19:38

அடிக்கு பதில் இடி. சபாஷ் எடப்பாடியார். ஆனாலும் இது போதாது. தெளிய வைத்து தெளிய வைத்து தினமும் வீழ்த்த வேண்டும்.


Dwarakanath Putti
மே 13, 2025 19:18

விடியா Dravida மாடல் ஆட்சி நடத்தும் தத்தி முதல்வருக்கு புத்தி வருமா ?


Kadaparai Mani
மே 13, 2025 19:18

Excellent EPS sir. super reply


sankaranarayanan
மே 13, 2025 19:06

அய்யய்யோ என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுத்தே இனி வாயை திறக்கவே கூடாது. இ.பி.எஸ். என்ன நடந்த உண்மைகளெல்லாவற்றையும் மக்களிடம் சொல்கிறாரே .அவரோட சமரசம் செய்து கொண்டால் என்ன என்று தான் ஒருவருக்கு தோன்றுகிறது.இது பெரிதாக போயிடும் போல இருக்கே என்றே அவர் நினைக்கிறார்.


Anantharaman Srinivasan
மே 13, 2025 19:01

எந்த கட்சியையும் சாராத பொதுமக்கள் இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி புழுதிவாரி தூற்றும் பேச்சுக்களை பார்த்து வெட்கி தலை குனிந்து வெகு நாட்களாகி விட்டது.


சமீபத்திய செய்தி