உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜ பதில்

நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜ பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், 'முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும்' என்று பாஜ பதில் அளித்துள்ளது.இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து தமிழக பா.ஜ., துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக, மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இது, தி.மு.க.,வினர் உட்பட அனை வருக்கும் தெரியும். ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி நாடகமாகி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார, கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார். அதேபோல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல், தன் அமைச்சர்களுடன், ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும். இலங்கை மக்கள், ஸ்டாலினை பார்த்து, 'உங்கள் தந்தை கருணாநிதி, எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை, நீங்கள் வந்து கேட்கிறீர்களே; இது, உங்களுக்கே நியாயமா' என்று கேட்பர். அப்போது தான், இலங்கை விவகாரத்தில், தி.மு.க., தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது நான்காவது கடிதம்

கச்சத்தீவை மீட்கக் கோரி, 2023 ஏப்., 19 மற்றும் 2024 ஜூலை 2ம் தேதி, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். இந்த ஆண்டு ஏப்., 2ம் தேதி, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் தீர்மானத்தை குறிப்பிட்டு, மீண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். இது பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நான்காவது கடிதம் ஆகும். இது தவிர, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில், 72 கடிதங்களை முதல்வர் எழுதி உள்ளார். அவற்றிலும், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Muthuraman
அக் 18, 2025 04:55

கச்ச தீவை வாரி கொடுத்ததே கருணாநிதி தான். இப்போது அதை மீட்கவேண்டும் என்று ஸ்டாலின் சொல்வது மிக வேடிக்கை தான்...


Venugopal S
அக் 17, 2025 20:02

பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் போன மாதிரியா?


vivek
அக் 17, 2025 20:58

அவர் மணிப்பூர் போயிட்டாரு...


Kulandai kannan
அக் 17, 2025 19:18

தமிழ்நாட்டு கடற்கரை 700 கிமீ நீளம். ஆனால் பெட்டர்மாக்ஸ் லைட்டேதான் வேண்டும்.


T MANICKAM
அக் 17, 2025 16:16

மக்களே நான் கடந்த TUESDAY திருப்பூர் பல்லடம் பஸ்ஸ்டாண்டில் கண்ட காட்சி மதுவை குடிக்காதீர்கள் என்று ஒரு கலைஞர் கூட்டம் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்கள் அதுவும் இந்த ஆட்சியைளர்கள் தான் ஆடவைத்திருப்பார்கள் போலும். இவர்களே விற்பார்கள் இவர்களே ஆதற்கு எதிர்ப்பு செய்வார்களாம் நல்ல கூத்து ஆட்சி .


Rengaraj
அக் 17, 2025 16:12

கச்ச தீவை மீட்பது என்பது என்ன அடகு வைத்த நகையை மீட்பது போன்ற காரியமா ? இதில் நம் நாட்டு அரசியல் வாதிகளை போன்று அந்த நாட்டிலும் அரசியல்வாதிகள் இருப்பார்களே , அவர்களும் அரசியல் செய்வார்களே ? அதை முதல்வர் ஸ்டாலின் யோசித்தாரா இல்லையா என்று தெரியவில்லை ? இது சர்வதேச அரசியல் சார்ந்த விஷயம் இல்லையா ? கடிதம் எழுதிவிட்டால் ஆச்சா ? இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பேசவேண்டும் என்று ஐடியா கொடுக்கதெரியுமா ? இரு நாடுகளுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட தங்கள் தமிழக மாநிலம் எந்தமாதிரியெல்லாம் உதவியாக இருக்கும் , கடலோர பகுதிகளில் மத்திய அரசுக்கு எந்தவகையிலெல்லாம் உதவிசெய்ய தயாராக இருக்கிறது , அங்கு செல்லும் , மற்றும் அங்கிருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ,தங்கள் மாநிலம் என்னவசதிகளை கூடுதலாக செய்யத்தயாராக இருக்கிறது, பொருளாதார ரீதியாக தங்கள் மாநிலம் அந்த நாட்டுக்கு இதுநாள் வரை அளித்த நன்மைகள் என்ன, இனிமேல் என்ன செய்யப்போகிறோம் , கல்வி , வேலைவாய்ப்பு விஷயத்தில் தங்கள் மாநிலம் பரஸ்பரம் என்னவெல்லாம் செய்யத்தயாராக உள்ளது , தீவிரவாதிகள் நுழையாத வண்ணம் தங்கள் மாநிலம் மத்திய அரசுக்கு எப்படி உதவப்போகிறது , இப்படி விரிவாக பட்டியலிட்டு கடிதம் எழுதினால் மிக்க உதவியாக இருக்கும், அதைவிடுத்து முதல்வரின் ஒரு பக்க கடிதம் என்னசெய்துவிடும் ?


Venugopal S
அக் 17, 2025 15:11

சம்பவம் நடந்தவுடன் எங்கள் தலைவர் மணிப்பூர் போய் அமைதியை நிலைநாட்டி விட்டு வந்து உடனே பத்திரிகையாளர்களை சந்தித்தாரே, அந்த தைரியம் தமிழக முதல்வருக்கு உள்ளதா?


Sun
அக் 17, 2025 14:32

போறேன், போக மாட்டேன்னு சொல்லல, போய் அந்த மணல்ல நான் சைக்கிள் ஓட்ட முடியுமா? அப்புறம் எதுக்கு நான் போகனும்?


Krishnamoorthy
அக் 17, 2025 14:18

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பிரச்சனைக்கு மோடி தீர்வு கண்டது போல, கச்சத்தீவு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை


Natarajan Ramanathan
அக் 17, 2025 13:54

எங்கே? கட்ச தீவிலா?


Muralidharan S
அக் 17, 2025 13:29

பணத்திற்கும், பிரியாணிக்கும், குவாட்டருக்கும் ஒட்டு போடும் டாஸ்மாக் .. இருக்கும் மக்களுக்கு - இவரது அப்பாதான் அடகு வைத்தார் என்பது மறந்து இருக்கும் என்று நினைத்து இருக்கலாம்.. நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கும் மொக்கை நாடக ஆட்சி...


புதிய வீடியோ