உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி மாணவியை தாக்கிய வாலிபர் கைது

கல்லுாரி மாணவியை தாக்கிய வாலிபர் கைது

திருப்பத்துார்: திருப்பத்துாரில், காதலிக்க வற்புறுத்தி கல்லுாரி மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துாரை சேர்ந்தவர் சந்தோஷ், 21. இவர், அப்பகுதியை சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும், 19 வயது மாணவியிடம், தன்னை காதலிக்கும்படி நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து வந்தார். நேற்று (நவ.,18) மாணவி, கல்லுாரி பஸ்சிலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ், தன்னை காதலிக்கிறாயா இல்லையா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த பெண், என்னால் உன்னிடம் எல்லாம் பேச முடியாது என கூறினார். ஆத்திரமடைந்த சந்தோஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து மாணவி, திருப்பத்துார் தாலுகா போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை