உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்கள் எண்ணம் இங்கு ஈடேறாது : அமைச்சர் கொதிப்பு

உங்கள் எண்ணம் இங்கு ஈடேறாது : அமைச்சர் கொதிப்பு

சென்னை: ''முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தயவு செய்து ஹிந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். பா.ஜ.,வினர் தான் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க நினைக்கின்றனர்; மதுரை பழங்காநத்தத்தில் நடந்த போராட்டம் தேவையற்றது.பா.ஜ., தலைவர்கள் எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், முதல்வர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார். வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள்; உங்கள் எண்ணம் தமிழகத்தில் ஈடேறாது. தேவையானால், முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை, 1920ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றமும், 1930ல் லண்டன் பிரிவு கவுன்சிலும் ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, 1958, 1975, 2004, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்றார்போல்தான், இந்த அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வேன். அங்குள்ள கருத்து வேறுபாடுகளுக்கு, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இந்த பிரச்னை வாயிலாக, தேர்தலில் லாபம் பார்க்க பா.ஜ., துடிக்கிறது. ஆனால், வரும் தேர்தலில் அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பழனி தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.தினசரி, 20,000 பேர் என, 10 நாட்களுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 106 )

Kubendran N
பிப் 10, 2025 09:33

தர்கா வாசலில் பண்ணி கரி சமைத்து உன்ன அனுமதி உண்டா சேகர், அப்படி நீ அனுமதி அளித்தாலும் ஒரு ஹிந்து கூட அந்த ஈன வேலையை செய்யமாட்டான், அது தன் எங்கள் மனு தர்மம். ஒரு நியாயம் வேணும் சேகர். நவாஸ் கனிக்கு ஒரு வார்த்தை எதிர்ப்பு சொல்லாதது எங்கள் வயிறு எரிகிறது.


R.Balasubramanian
பிப் 07, 2025 16:00

ராமநாதபுரம் முஸ்லீம் எம்பிக்கு திருப்பரங்குன்றம் முருகன் மலையில் என்ன வேலை? பிரியாணி கொடுக்க, திங்க யார் அனுமதி கொடுத்தது?


karthik
பிப் 07, 2025 13:33

அன்னதானம் செய்வது இந்து மக்களின் பக்தர்களின் பணத்தில் அதில் அரசாங்கத்தின் பங்கு துளியும் இல்லை.. என்ன அடக்கி வாசிக்கிறீங்களான? அப்படி என்றால் என்ன சொல்ல வரீங்க? இல்லை என்றால் கூட்டத்தின் உள்ள புகுந்து கலவரம் செய்திருப்பீர்களா?


Minimole P C
பிப் 07, 2025 08:11

A man with criminal records, in disguise as Hindu, becomes minister for HR&CE, attends Sanathana Dharma olippu manadu, goes to church and cries as alleloya, melts all gold in the temples, always speak against Hinduism. Great.


SAMANIYAN
பிப் 07, 2025 07:18

முருகன் அருளால் திமுக விரைவில் சுற்று சம்காரம் செய்ய படும் ..ஹிந்துக்களுக்கு பிரச்சனை என்றால் ஹிந்துக்கள் வருவார்களோ இல்லையோ பாஜக வரும் ..அன்று சேர்ந்த கூட்டம் மக்கள் கூட்டமாக இருக்கலாம். ஆனால் அதனை பேர் ஒன்று கூட .. அதாவது ஹிந்துக்கள் ஒன்று கூட பாஜக நண்பர்களின் கடும் உழைப்பே காரணம் என்று பாஜக ஆட்சி அண்ணாமலை அண்ணன் தலைமையில் தமிழ் நாட்டில் அமைகிறதோ..அன்று தான் ஹிந்துக்கள் யார் என்று தமிழ்நாடு அறியும் ..அது போல் முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு பிஜேபி மதவாத கட்சி இல்லை என்பதும் புரியும் ..முஸ்லீம் மக்களே உங்களுக்கு ஒரு செய்தி தவறு செய்பவன் யாராக இருந்தாலும் அவன் முஸ்லீம் என்பதற்காகவோ ,இல்லை முஸ்லிம்கள் என்ன தவறு செய்தாலும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கவோ அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பது. மிக பெரிய விளைவுகளை தரும் ..அது இப்பொழுது கொஞ்சமாக கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கும் ..அதனால் சற்று யோசித்து செயல் படுங்கள் ..


karthik
பிப் 07, 2025 07:17

நாங்களும் அடக்கி தான் வாசிக்கறோம் சேகரு - திருப்பரங்குன்றம் முருகனுக்கு மட்டும் தான் சொந்தம் அளவுக்கு மீறி போச்சுன்னா நீங்களும் உங்க அமைதி மார்க்கமும் தாங்க மாட்டிங்க.


Palanisamy T
பிப் 07, 2025 04:55

சும்மாவுங்கள் எண்ணம் ஈடேறாதென்று கொதித்துக் கொண்டு அண்ணாமலை அவர்களிடம் பேசவேண்டாம். நீங்கள் செய்யவேண்டிய வேலையை நன்றாக புரிந்துக் கொண்டு அதன்படி நடந்தாலே போதும். கோவிலென்றால் அங்கே உயிர்ப்பலிக்கு இடமில்லை புலால் உணவிற்கும் இடமில்லை. அதையே உங்களால் அமுல்படுத்தமுடியவில்லை என்றால் நீங்கள் அறநிலை துறை அமைச்சராக இருப்பதில் கொஞ்சமும் அர்த்தமில்லை மரியாதையுமில்லை. உங்கள் கடமையை சரியாக செய்ய விடாமல் மேல் இடத்திலிருந்து யாராவது தடுத்தார்களா? இதற்குமா நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்கவேண்டும்


ramani
பிப் 07, 2025 04:22

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தியது ஹிந்து மக்கள் தான். இதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் அரசு. ஹிந்து மக்கள் போராட தூண்டியது திராவிஷ மாடல் அரசுதான்


Saai Sundharamurthy AVK
பிப் 06, 2025 23:57

இவருடைய பிரச்சினை என்னவென்றால் போராட்டம் நடத்தியவர்கள் பாஜகவினர் தான் என்று சொன்னால் பாஜகவுக்கு அவ்வளவு ஆதரவு மக்களிடம் உள்ளதா என்று கேட்கத் தோன்றும். ஒருவேளை மக்கள் தான் கூடினார்கள் என்று சொன்னால் இந்துக்கள் தான் ஒன்று கூடியதாக அர்த்தம் ஆகி விடும். இல்லை ! இந்துக்கள் தான் கூடினார்கள் என்றால் இந்து முன்னணி அவ்வளவு வலுவாக உள்ளதாக அர்த்தம் ஆகி விடும். ஆகவே, தலைமைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கூடிய கூட்டதை பார்த்து விழி பிதுங்கி முழிக்கிறார். இத்தனைக்கும், அங்கு கூடியவர்கள் அனைவரும் 200 / 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லாரியில் முந்திக் கொண்டு வந்த கூட்டம் அல்ல..... !! பாஜகவின் வலிமை என்னவென்று இப்போது திமுக தலைமைக்கு தெரிந்திருக்கும். தேவையில்லாமல் இந்துக்களை வம்புக்கு இழுத்தால் என்ன நேரிடும் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும்.


Minimole P C
பிப் 13, 2025 17:55

The DMK understood the meaning of the growd gathered at TPkundram. The ways DMK reacted shows that how much the crowd has affected them. The very next day all parties18 of DMK alliance released a press report stating that the alliance for secularism and in no way against any religion. In addition DMK asked its Muslims alliance to do annathanam etc for Thai poosam to show that they are for mutual existence. All are drama to mislead. DMK one side says it will remove sanathanam and other side calls for secularism. They think that TN is still in 1960.


Saai Sundharamurthy AVK
பிப் 06, 2025 23:39

இவர் இந்து அறநிலையத்துறை அமைச்சரா ? அல்லது இஸ்லாமிய துறை அமைச்சரா ? இந்துக்கள் காணிக்கையாக செலுத்தும் முருகன் கோவில் உண்டியல் பணத்தை எடுத்து சாப்பிடத் தெரிகிறது. சொகுசு வாகன வசதியுடன் சுற்ற தெரிகிறது. அதே பணத்தில் வாழவும் தெரிகிறது. தலைவர் குடும்பத்திற்கு கமிஷன் கொடுத்து தானும் எடுத்துக் கொள்ளத் தெரிகிறது. ஆனால், முருகன் கோவிலையும், மலையையும் காக்க திராணியில்லை. இந்துக்களுக்கு ஒன்று என்றால் அவர்களுக்கு உதவ வராமல் ஓடியது ஏன் ??? இதற்கு எதற்கு இந்து ... அறநிலைய.....துறை அமைச்சராக இருக்க வேண்டும் ? எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டிருந்தால் அவருடன் சேர்ந்து முன்னாள் தெர்மோகோல் அமைச்சரின் வீட்டில் ஒளிந்து கொள்ள ஏமர்ஜென்சி கதவை திறந்து விட்டிருப்பார்களே !!!


புதிய வீடியோ