உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு

போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு

மதுரை : மதுரையில், கஞ்சா பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தவரையும், அவரது மகனையும் வீடு புகுந்து நான்கு பேர் கும்பல் பட்டா கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.மதுரை, சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் பாண்டி, 55. இவரது வீட்டருகே பராமரிப்பற்ற கட்டடம் ஒன்றில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து, போலீசாருக்கு பாண்டி தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தார். பாண்டியின் உறவினரான ஒருவர் இதுகுறித்தும், சொத்து பிரச்னை தொடர்பாகவும் தகராறில் ஈடுபட்டு ஒருவாரமாக சிறையில் இருக்கிறார். இதன் காரணமாகவும், போலீஸ் கண்காணிப்பு காரணமாகவும் ஆத்திரமுற்ற அவரது கூட்டாளிகளான நான்கு ரவுடிகள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பாண்டி, மகன் கார்த்திக், 35, ஆகியோரை பட்டா கத்தியால் வெட்டி, 'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' என, மிரட்டி விட்டு சென்றனர். உயிர் பிழைக்க வீட்டினுள் பாண்டி, கார்த்திக் ஓடியபோது அவர்கள் மீது கற்களை வீசினர். காயமுற்ற தந்தையும், மகனும் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சி பரவியதை தொடர்ந்து, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அளித்த விளக்கம்:கார்த்திக்கிற்கும், அவரது அத்தை மகன் நாகரத்தினத்திற்கும் சொத்து பிரச்னை உள்ளது. நாகரத்தினம் துாண்டுதலில் கார்த்திக் வீட்டில் இருந்த கேமராவை சேதப்படுத்தியதோடு, தடுத்த அவரையும் தாக்கினர். இதுதொடர்பாக, ஜெய்ஹிந்த்புரம் முத்துராமலிங்கம் 19, அருண்பாண்டி 19, பாலமுருகன் 20, ஆதீஸ்வரன் 19, நாகராஜ் 18, சரவணகுமார் 19, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பயன்படுத்தியது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் பாண்டி, கார்த்திக் தாக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

MARAN
ஜூலை 08, 2025 10:41

உத்தமரே போல் சட்டசபைக்குள், குட்கா , பான்பராக் , கொண்டுசென்றார் , இப்போ அனைத்து இடங்களிலும் கஞ்சா , நிர்வாகம் என்றல் என்னன்னே தெரியாதவர்


V RAMASWAMY
ஜூலை 08, 2025 10:20

திருடர்களை முன்னேற்றும் கழகங்களை ஆதரிப்பவர்களுக்கு இது மட்டுமல்ல, இன்னும் பல தீமைகள் வந்துகொண்டுதானிருக்கும். 1. வாக்காளர்கள் சிந்தித்து நல்லவர்களை அரசு அமைக்க செய்யுங்கள். 2. வன்முறை, தீய பழக்கங்கள் சொல்லிக்கொடுக்கும் சினிமாக்களையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும் புறக்கணியுங்கள்.


Kalyanaraman
ஜூலை 08, 2025 08:06

திமுகவின் கட்சி அலுவலகத்திலேயே போதைப்பொருட்கள் விற்கலாமே. தமிழகம் முழுவதும் எங்கே பார்த்தாலும் போதை மருந்து விக்கிறவன் & சப்ளை பண்றவன் & கடத்துரவன் திமுக காரனா மட்டுமே இருக்கானுங்க.


ஜூலை 08, 2025 08:00

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரம்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம்..


Vijay
ஜூலை 08, 2025 07:05

திராவிட மாடல்


ஜூலை 08, 2025 07:02

வெட்டியவருக்கு நஷ்டஈடு தரவேண்டும் ... அவருக்கும் குடும்பம் இருக்கிறது ,,,


Ram
ஜூலை 08, 2025 05:57

இந்த போலீசு கையுளையே பதிலைவைத்து சுத்திக்கிட்டிருக்கு , இந்த மாதிரியான ரௌடியிசத்தை தடுக்க துப்பில்லை


சமீபத்திய செய்தி