உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திட்டக்குடி: திட்டக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, வதிஷ்டபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற, வதிஷ்டபுரம், காலனியைச் சேர்ந்த அரசன் மகன் ராதாகிருஷ்ணன், 28, என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.போலீசார் வழக்கு பதிந்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 17, 2024 12:42

தமிழ்கத்தின் எங்கோ உள்ள திட்டக்குடியில் கஞ்சா கிடைக்குமென்றால், மாநகர் சென்னையில் கிடைக்காத…? நிறைய கிடைக்கும்.


nagendhiran
நவ 17, 2024 10:28

தமிழன் கஞ்சா கடத்த கூட உரிமையில்லா? என்ன நாடு இது?


முக்கிய வீடியோ