உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலி தாக்கி வாலிபர் மரணம் ரூ.10 லட்சம் நிதி உதவி

புலி தாக்கி வாலிபர் மரணம் ரூ.10 லட்சம் நிதி உதவி

ஊட்டி : புலி தாக்கி பலியான வாலிபர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி கவர்னர் சோலை அருகே, கல்லக்கொரை தோடர் மந்து பகுதியைச் சேர்ந்த கேந்தர் குட்டன், 38, நேற்று முன்தினம் காலை, வனப்பகுதியில் புலி தாக்கியதில் உயிரிழந்தார். வனத்துறை சார்பில், கேந்தர் குட்டன் தாய் சசீடின்ஸ் பூவிடம், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. புலியை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, வனத்துறை அப்பகுதியில், 15 கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை