உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹோட்டலுக்கு ரிவ்யூ செய்தால் கமிஷன் 5.75 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர்

ஹோட்டலுக்கு ரிவ்யூ செய்தால் கமிஷன் 5.75 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர்

வேலுார்: ஆன்லைனில் ஹோட்டல்களுக்கு ரிவ்யூ செய்தால் அதிக கமிஷன் தருவதாக இளைஞரிடம், மர்ம நபர்கள் 5.75 லட்சம் மோசடி செய்துள்ளனர். வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் 31 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸாப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன், ஆன்லைன் மூலம் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு ரிவ்யூ செய்தால் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்தது. இதனை உண்மை என நம்பிய அவர், அதில் ரிவ்யூ செய்து அவ்வப்போது கமிஷன் பெற்று வந்துள்ளார். மேலும் கூடுதலாக லாபம் பெற வேண்டுமெனில், நாங்கள் கொடுத்துள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர் அடுத்த சில நாட்களில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 878 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு கமிஷன் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை