உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக, சென்னை நீலாங்கரை வீட்டில் வைத்து மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hlqehk38&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் இன்று (அக் 04) காலை மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அங்கு அவர் இல்லை. பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

J K EKANATH BABU
அக் 04, 2025 20:02

திமுகவுக்கு வந்தா இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.


Krishnamurthy Venkatesan
அக் 04, 2025 19:31

கூகுளை நாடலாம். அன்றைய தின வீடியோக்களை கேட்டு அவர்களை request செய்யலாம். ஒருவேளை அவர்களின் புகைப்படமோ/வீடியோக்களோ கிடைத்தால் விசாரணைக்கு மிக உதவியாக இருக்கும்.


Indhuindian
அக் 04, 2025 19:30

Where are the proponents of Free Speech? Where are the actors and actresses falling over each other to condemn anything done by the Central Government. Where are the people who call the current central administation as an Emergency.


Gajageswari
அக் 04, 2025 19:28

நீதிமன்ற வாரன்ட் 30000 மேல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது, இதை நிறைவேற்றாத காவல்துறை. வேடிக்கை பார்க்கும் நீதித்துறை. இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்


Narayanan Narasimhan
அக் 04, 2025 18:48

மிகவும் கண்டிக்கத்தக்கது.


Vasan
அக் 04, 2025 18:43

Why Central Government is not arresting State politicians, who are repeatedly telling false things about the Central Government?


உண்மை கசக்கும்
அக் 04, 2025 17:07

இங்கு உள்ள பதிவுகளை படித்தாலே நம்ம காவல்துறை லட்சக்கணக்கான தமிழர்களை கைது செய்யணுமோ. உங்க சிறைகளில் இடமிருக்குமா . இல்லை புதிய சிறைகள் கட்டி கோடிகளை சுருட்டலாமா


Srinivasan Narasimhan
அக் 04, 2025 16:37

ஓ கருத்து சுதந்திரம் சூப்பரா இருக்கு இவங்கதான் ஜனநாயகரகாவலர்கள்


Lee J
அக் 04, 2025 16:33

Typical DMK model, arrest anyone who speaks the truth…


Naga Subramanian
அக் 04, 2025 16:28

மாரிதாஸ் யாருக்கு ஆதரவு என்றே புரியவில்லை. அண்ணாமலையை எதிர்ப்பதிலும் மும்மரமாக இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை