உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; மனித உரிமை ஆணையம் விசாரணை!

ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; மனித உரிமை ஆணையம் விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dla01dx9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில டிஜிபி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மார் 25, 2025 16:53

முஸ்லீம் ஒருவனுக்கு இப்படி என்றால் ஐயோ குய்யோ முறையோ என்று ஊளையிடுவது ஆனால் இந்துக்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அதற்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள் பின்னாலும் முன்னாலும் மூடிக்கொண்டு சும்மா இருத்தல் இந்த ஸ்டாலின் அரசு


sugumar s
மார் 25, 2025 14:54

Human right commission should establish the fact that in TN Law and Order is extremely bad and it is one side for the party people. they should make this fact aware to entire nation including TN public


MUTHU
மார் 25, 2025 13:28

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடுச்சி. இனி எத்தனை தலை உருளப்போகுதோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை