உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!

ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 26) ஜாஹிர் உசேன் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிமன்றம், 'டி.ஜி.பி.,- சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை