உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது

பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது

ஜெயலலிதா உத்தரவால் மூன்று முறை முதல்வராக இருந்தவரான, 'அ.தி.மு.க.,வின் விசுவாச தலைவர்' என தன்னைத்தானே கூறிக் கொள்ளும் பன்னீர் செல்வம், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வாய் கூசாமல் சொல்கிறார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நடை பயிற்சியில் யதார்த்தமாக சந்தித்து, பின் வீட்டிற்கே விருந்தாளியாக சென்று தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பாடினார். விளையாட்டு மைதானத்தில், ஸ்டாலின் மருமகனை சந்தித்து மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு அச்சாரம் போட்டார். ஜெ., கொடுத்த அடையாளத்தையே தொலைத்துவிட்டு வீதியில் நிற்கிறார். இந்நிலையில், அவருடன் செங்கோட்டையன் சேர்ந்து பசும்பொன்னில் திட்டமிட்ட அரசியல் நாடகத்தை அரங்கேற்றி, ஒரு நாள் பரபரப்பு செய்தியை உருவாக்கினர். பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக அரசியலில் வரலாறு கிடையாது. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Santhakumar Srinivasalu
நவ 02, 2025 20:46

முதல்ல பூஜ்ஜியம் ஆகாம இருப்பியான்னு பாருங்க?


S.L.Narasimman
நவ 02, 2025 12:46

இந்த நாலு பேரை விலக்கியதால் அதிமுகாவுக்குநாலு ஒட்டு போயாச்சி..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை