உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை : ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு அழைப்பு

டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை : ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: பிரதமர் மோடி அமெரிக்க வருகை தர உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அரசு முறைப்பயணமாக பிரானஸ் , அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் இமானுவெனல் மெக்ரானை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அத்துடன் பிரான்ஸ் பயணத்தை முடித்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசினார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து டிரம்ப்ப் வலியுறுத்தினார். இந்த உரையாடலின் போது ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு புடின் அழைப்பு விடுத்ததாகவும், அதனை டிரம்ப் ஏற்று விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
பிப் 13, 2025 04:24

கருத்து வேற்றுமைகள், வெறுப்புக்கள், போன்றவைகளுக்கு காரணம் நாட்டை ஆளுபவர்கள். மக்கள் அல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரஷியா , அமெரிக்கா எதிரி நாடுகள். ட்ரம்ப் வந்தவுடன் நட்பு நாடுகள். இப்போதுதான் உலக அமைதி திரும்புகிறது. டிரம்புக்கு வாழ்த்துக்கள்.


aaruthirumalai
பிப் 13, 2025 00:43

சந்திப்புக்கானது நல்ல மாற்றம் ஏற்படும்.


கிஜன்
பிப் 13, 2025 00:25

ஜி அமெரிக்கா போறதுனாலதான் .... டிரம்பும் ...புதினும் பேசுறாங்களாமாம் ..... இது சுப்பிரமணிய சாமிக்கு தெரியுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை