உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரப்பானி கொலையில் முக்கிய நபர் கைது

ரப்பானி கொலையில் முக்கிய நபர் கைது

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி கொலையில், தலிபான்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானி, கடந்த 20ம் தேதி, பயங்கரவாதிகள் இருவரால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை, அதிபர் ஹமீத் கர்சாய் நியமித்துள்ளார்.இந்நிலையில், ஹமீதுல்லா அகுண்ட் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவருக்கும் தலிபான்களுக்கும் தொடர்பிருப்பதாகவும், ஆப்கன் அரசு செய்தித் தொடர்பாளர் சிபதுல்லா சபி தெரிவித்துள்ளார்.தலிபான்களுக்கும், ரப்பானி தலைமையிலான அமைதி கவுன்சிலுக்கும் இடையில் தூதுவராக, அகுண்ட் செயல்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ