உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வினேஷ் போகத் வழக்கு : 3-வது முறையாக ஒத்திவைப்பு

வினேஷ் போகத் வழக்கு : 3-வது முறையாக ஒத்திவைப்பு

பாரிஸ்: வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் மூன்றாவது முறையாக ஒத்தி வைத்தது. தீர்ப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு(இரவு 9.30 மணி) ஒத்திவைக்கப்பட்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார். பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nei5twfu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார் . தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ள விட்ட நிலையில், இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வரும் 16-ம் தேதி ஒத்தி வைத்தது தீர்ப்பாயம். இதையடுத்து தீர்ப்பு தாமதமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஆக 14, 2024 00:07

வெள்ளிப்பதக்கம் கொடுங்க கொடுங்க என்று இவரின் அட்டாகாசத்தை தாங்கமுடியாமல், பிரான்ஸ் அரசு இவரை கைது செய்து சிறையில் அடைக்க போகிறது. அதற்கு இந்திய அரசு ஒன்றும் செய்யமுடியாது.


nisar ahmad
ஆக 13, 2024 23:54

மோடிஜியின் கண்ணசைவிற்காக காத்திருக்கிறார்களாம்.


Venkataraman
ஆக 13, 2024 23:34

இந்த காலதாமதத்தால் அந்த பதக்கத்தின் மதிப்பும் பெருமையும் குறையுமே தவிர கூடப்போவதில்லை. காலம் கடந்து கிடைக்கும் எந்த பொருளுக்கும் எந்த பயனும் இல்லை. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து மூன்று நாட்களாகி விட்டன. அந்த விளையாட்டு வீராங்கனையும் இனி விளையாடப்போவதில்லை என்று அறிவித்து விட்டு நாடு திரும்பி விட்டார்.


ரிஷி கௌதம்
ஆக 13, 2024 22:42

காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்...


G.Subramanian
ஆக 13, 2024 22:16

பாவம் , ஒரு இளம் வீரரின் வாழ்க்கைப் பிரச்சனையை விளையாட்டுத் தீர்பாளையம் கேலிக்கூத்தாக்குகிறது


முருகன்
ஆக 13, 2024 21:53

இதன் பின் இருக்கும் அரசியல் விளையாட்டை விட சுவாரஸ்யமாக உள்ளது


மேலும் செய்திகள்