உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் ரயிலில் கடத்தப்பட்ட 155 பேர் மீட்பு; பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ரயிலில் கடத்தப்பட்ட 155 பேர் மீட்பு; பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெஷாவர்: பாகிஸ்தானில் ரயிலில் கடத்தப்பட்டவர்களில் 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 27 பேர் கொல்லப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4thx2ug0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், சிலரை விடுவித்துவிட்டு, 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.அவர்களை மீட்கும் பணியில் பாக்., ராணுவம் ஈடுபட்டுள்ளது. ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மோதலுக்கு இடையே பெண்கள் 31 பேர், குழந்தைகள் 15 பேர் உட்பட 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Perumal Pillai
மார் 12, 2025 17:43

27 freedom fighters were dastardly killed by an army which is nothing but a band of terrorists. Your valiant efforts will not go waste. Rest in Peace .


ram
மார் 12, 2025 12:48

save sriya என்று போஸ்ட் போட்டு இங்கு கதறினவர்கள், இப்போது அங்கு அவர்களுக்குள் கொன்று கொன்று விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள், இதை பத்தி எந்த திருட்டு திமுக ஊடகங்கள் பேசவில்லை. அமைதி மார்க்கம், எல்லோரையும் அடக்கம் செய்து கொண்டு இருக்கிறது.


Rajarajan
மார் 12, 2025 12:36

இந்த லட்சணத்தில், பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள காஷ்மீர் நம்மோடு சேர்ந்தால், நம் நிலைமை என்ன ?? அவர்கள் இந்தியா முழுவதும் நம்மோடு கலந்து விடுவார். பின்னர், தினம் தினம் இங்கு பட்டாசு தான். வேண்டவே வேண்டாம்.


Ramesh Sargam
மார் 12, 2025 12:01

பாகிஸ்தானை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. அவர்களை அவர்களே அழித்துக்கொள்வார்கள்.


Pandi Muni
மார் 12, 2025 11:39

அழியட்டுமே


சண்முகம்
மார் 12, 2025 10:33

பயங்கரவாதம் பாக்கிற்கு இப்பொழுது கசக்குமே!


Rajah
மார் 12, 2025 10:10

பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படைகளினால் கொல்லப்பட்டனர். புள்ளிகள் மௌனம்.


புதிய வீடியோ