உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியாவில் கோர விபத்து; மாணவர்கள் உட்பட 11 பேர் பரிதாப பலி

இந்தோனேஷியாவில் கோர விபத்து; மாணவர்கள் உட்பட 11 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாண்டுங் : இந்தோனேஷியாவில் கார்கள், மோட்டார் பைக்குகள் மீது அடுத்தடுத்து பஸ் மோதிய விபத்தில், மாணவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற 61 மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று, ஜகர்த்தா அருகேயுள்ள தீபோக் பகுதி உயர்நிலைப் பள்ளிக்கு இரவில் திரும்பிக் கொண்டிருந்தது.மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கிய அந்த பஸ்சின் பிரேக் திடீரென செயலிழந்தது.இதனால், முன்னால் சென்ற கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் மீது மோதி பஸ் விபத்தில் சிக்கியது. இதில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் பலியாகினர்.விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் மாணவர்கள், ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் மோட்டார் பைக் பயணி என தெரிய வந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெறும் 53 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ