உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தோஹா விமானம் குலுங்கிய சம்பவத்தில் 12 பேர் காயம்

தோஹா விமானம் குலுங்கிய சம்பவத்தில் 12 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டப்ளின்: தோஹாவில் இருந்து டப்ளின் நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். கத்தார் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு பயணித்தது. விமானம் துருக்கிநாட்டின் மீது பயணித்தது. அப்போது விமானம் குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமான நிலையத்தில்தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். தொடர்ந்து விமானம் தரையிறங்கும் போது 6 விமான சிப்பந்திகள் மற்றம் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றும் இந்நிகழ்ச்சியால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இளந்திரையன் வேலந்தாவளம்
மே 27, 2024 12:14

அதிகப்படியான மேக மூட்டம்... புயல்.. சமயங்களில் விமானம் அதிர்வது normal. அந்த சமயங்களில் பயணிகள் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்தால் போதுமானது... எழுந்து நடப்பதாலயே விபத்து ஏற்படுகிறது...இந்த நிகழ்விலேயே பணியாளர்கள் 6 நபர்கள் காயம் பட்டதும் அதனால்தான்..


Varadarajan Nagarajan
மே 26, 2024 21:30

கடவுளே இதென்ன அடுத்தடுத்து விமான விபத்துக்கள். அண்மையில் லண்டனிலிருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லயன்ஸ் விமான விபத்தில் ஒருவர் பலி பலருக்கு காயம். அதேபோல் தற்பொழுது கத்தார் ஏர்லயன்ஸ் விமான விபத்து. வேறு எதுவும் மீண்டும் நடக்காமலிருக்க பிரார்த்திப்போம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ