உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "கேட்கவே மனம் கலங்குதே": குவைத்தில் 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழப்பு

"கேட்கவே மனம் கலங்குதே": குவைத்தில் 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத் சிட்டி: குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l5xn1dxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02022ம் ஆண்டு 731 இந்தியர்களும், 2023ல் 708 இந்தியர்களும் குவைத்தில் உயிரிழந்துள்ளர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை

இதற்கு முன்னர் 2014 முதல் 2018ம் ஆண்டு காலகட்டத்தில், 2,932 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். 2018ல் மட்டும் 659 இந்தியர்கள் உயிரிழந்தனர். குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடந்த தீ விபத்திலும் 40 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புகார்கள்

கோவிட் காலத்தில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், 2022ம் ஆண்டு 71,432 பேர் குவைத் சென்றுள்ளனர். ஊதியம் தாமதம், நெருக்கடியான இடத்தில் தங்க வைப்பது உள்பட பல புகார்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2021ம் ஆண்டு மார்ச் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் வரை மட்டுமே குவைத்தில் உள்ள இந்திய தூதகரத்திற்கு 16 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishna Moorthy
ஜூன் 14, 2024 08:46

இதில் எத்தனை பேர்கள் முறையான ஆவணங்களுடன் சென்றனர்? ஏஜெண்டுகள் மூலம் சென்றனர் என தெரியுமா ?


தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2024 00:59

என்ன வளம் இல்லை மோடியின் திருநாட்டில்? ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று அன்றே பாடிவிட்டார். பலருக்கு இன்னும் புரியவில்லை. மோடியின் ஆட்சியில் இளைஞர்கள் மாதம் நான்கு லட்சம் ரூபாய் கூட ஐடியில் சர்வசாதாரணமாக சம்பாரிக்கிறார்கள். எலெக்ட்ரிசின், பிளம்பர் கூட மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாரிக்கிறார்கள். எதற்கு வெளிநாட்டு மோகம்? குடும்பத்தை விட்டு பிரிந்து, பத்தாயிரம் ரூபாய் கூட சேமிக்கமுடியாமல், அடிமையாக ஏன் வெளிநாட்டு வாழ்க்கை?


adalarasan
ஜூன் 13, 2024 21:59

வெளிநாட்டு மோகம், அதிக பண ஆசை அதனால் ஏமாற்றுப்பட்டு பலரிதுபோன்ற நாடுகளில் சென்று அகப்பட்டு கொள்கிறார்கள். ஏமாற்றவும் படுகிறார்கள்?


m.arunachalam
ஜூன் 13, 2024 21:21

Our NRIs earning and sending One hundred billion Dollars 8.3 lakh croresevery year to our country. Their mental and physical suffering is enormous. Here we r behind cinema artists and cricket. Better to be patriotic more.


Ramesh Sargam
ஜூன் 13, 2024 21:02

இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புக்கள் இல்லை. மத்திய அரசு இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்கவேண்டும். மக்களும், அதிக சம்பளம் கிடைக்கும் என்கிற எண்ணத்திலும், வெளிநாட்டு மோகத்திலும் சிக்கி வெளிநாடு சென்று இப்படி மாள்கிறார்கள்.


Sundarraj
ஜூன் 13, 2024 18:16

மிகுந்த வேதனையானா சம்பவம. அரபி நாட்டில் ஆசியா தொழிலாளிகளுக்கு மதிப்பு இல்லை. சட்டம் அந்நாட்டு மக்களுக்கு சாதகமாக உள்ளது. கீழ் மட்டத்தில் வேலை பார்ப்போருக்கு பாதுகாப்பு இல்லை.


மேலும் செய்திகள்