உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க நர்சுக்கு 760 ஆண்டு சிறை

அமெரிக்க நர்சுக்கு 760 ஆண்டு சிறை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகப்படியான இன்சுலின் ஊசியை செலுத்தி, 17 நோயாளிகளை கொலை செய்த நர்சுக்கு, 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டி, 41. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.இவர் பணியாற்றி வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளிகள் இறந்தது தொடர்பாக, கடந்த ஆண்டு இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதில், அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தி, அவர்களை ஹீதர் கொன்றது தெரியவந்தது. மேலும் கடந்த 2020 முதல் 2023 வரை, ஹீதர் பணியாற்றிய மருத்துவமனைகளில் மொத்தம் 17 பேரை, இவ்வாறு அவர் கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து, பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. விசாரணையின் போது ஹீதர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ