உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?

சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?

இஸ்லமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் இது குறித்து விவாதிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புக்கு புது அழுத்தம் உருவாகியுள்ளது.27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி.,யின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில், ஏறத்தாழ லீக் சுற்றுப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அடைந்த தோல்விகளால், முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. நேற்று நடைபெற இருந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டமும் மழையால் ரத்தானது. இதனால், பாக்., அணிக்கு ஒரு வெற்றி கூட இல்லாத மோசமான தொடராக இது அமைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், இந்த முறை இந்தியாவுக்கு 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது என்றெல்லாம் கூறிய நிலையில், அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இது சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வி குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தக் கோரி அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான அமைப்பாக செயல்பட்டு வந்தாலும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கான ஆலோசகர் ரானா ஷனவுல்லா கூறுகையில், 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான அமைப்புதான். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் ஆட்டம் மோசமானது. எனவே, இது குறித்து பார்லிமென்டிலும், அமைச்சரவையிலும் விவாதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். ஆலோசகர்களுக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் பொறுப்புகளை தவறி விட்டதாக ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியெனில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியுள்ளனர்.பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பார்த்தால், இது பாகிஸ்தானா? அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய நாடா? என்று நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். எனவே, பிரதமர் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஆலோசகரின் இந்தப் பேச்சின் மூலம் பாகிஸ்தான் வீரர்களுக்கும், அணி நிர்வாகிகளுக்கும் அரசு வழங்கி வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SUBRAMANIAN P
பிப் 28, 2025 14:06

முதல்ல மனுஷனா நடந்துக்கோங்க. அப்போதான் எல்லாம் கைகூடிவர வாய்ப்பு கிடைக்கும். எங்க குண்டு வைக்கலாம், இந்தியாவில் எப்படி நாசவேலை செய்யலாம் என்று சதிவேலைகளிலேயே மூளையை உபயோகப்படுத்தினால் இப்படித்தான் அசிங்கப்படவேண்டும். சொந்த நாட்டுலயே வேடிக்கை பார்க்கும் நிலை வந்துவிட்டது.


விவசாயி
பிப் 28, 2025 10:35

Sir நமக்குத்தான் பாக்கிஸ்தான் புடிக்காதே அதனால அங்க என்ன நடந்த நமக்கென்ன? என்ன நான் சொல்லுறது சரிதானே நடுநிலை


Amar Akbar Antony
பிப் 28, 2025 10:53

ஆமாமா என் நண்பன் கூட இப்போ பாகிஸ்தானை பற்றி பேசாதே என்கிறான். ஒரு காலத்தில் பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியவன். என் நம்பன் ஒரு இஸ்லாமியன்.


Anand
பிப் 28, 2025 12:08

அதானே, பாகிஸ்தானை பற்றி பேசாதீர்கள், கண்ட கண்ட ......... நமக்கு புத்தி சொல்லுது என சொன்னால் கேக்கமாட்டேங்கிறாங்க.....


ديفيد رافائيل
பிப் 28, 2025 10:35

Pakistan cricket team தோற்றுப் போனதற்கு காரணமே அனைத்து தரப்பிலிருந்தும் ஜெயித்தே ஆக வேண்டுமென்ற மன அழுத்தம் தரப் பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரியுது. உண்மையிலே Pakistan cricket வீரர்கள் பாவம் தான்,


Kumar Kumzi
பிப் 28, 2025 11:00

அதுசரி ஒரு பாகிஸ்தான்காரனின் பிரச்சினை இன்னொரு பாகிஸ்தான்காரனுக்கு தானே புரியும்


பெரிய ராசு
பிப் 28, 2025 12:41

நீ ஏன் ஓப்பாரி வைக்கிறே, உனக்கு உன்மக்கள் தோத்துட்டான்னு கஷ்டம் என்ன பண்ண சோறு திங்கறது ஒரு பக்கம் காவல் காக்கிறது ஒரு பக்கம்


vadivelu
பிப் 28, 2025 20:31

மன அழுத்தம் இல்லை, திமிர், ஆணவம், பெரிய ..டிங்கி என்ற எண்ணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை