உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பைடன் - டிரம்ப் குழாயடி சண்டை!

பைடன் - டிரம்ப் குழாயடி சண்டை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காண, தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, தீவிர முயற்சியில் உள்ளனர். சி.என்.என்., தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், இருவரும் ஒரே மேடையில் நேருக்கு நேர் நின்று நடத்திய விவாதத்தின் போது, காதில் ரத்தம் வரும் அளவுக்கு கொச்சையாக ஒருவரை ஒருவர் விமர்சித்தது, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. பைடன்: பொதுவெளியில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர்; மனைவி கர்ப்பமாக இருந்தபோது, ஆபாச பட நடிகையுடன், 'ஜல்சா' செய்ததற்காக பல நுாறு கோடி டாலர் அபராதம் செலுத்தி, தண்டனை பெற்றவருக்கு பேச என்ன தகுதி இருக்கு?டிரம்ப்: நானா தண்டனை பெற்றவன். இறந்துபோன உங்கள் மகன் மட்டும் என்ன ஒழுங்கா? அவரும் தண்டனை பெற்றவர் தான். உங்களுக்கு விரைவில் தண்டனை காத்திருக்கு.பைடன்: 'நான் பழிவாங்கப் போகிறேன்' என, எந்த அமெரிக்க அதிபராவது இதுவரை கூறி நீங்கள் கேட்டதுண்டா. ஜனநாயகம் குறித்து அடிப்படை அறிவு கூட இல்லை இவருக்கு.டிரம்ப்: தன் முட்டாள்தனமான குடியேற்ற கொள்கைகளால் எல்லைகளை திறந்துவிட்டீர்கள். இங்கு ஊடுருவல்காரர்கள் நட்சத்திர விடுதிகளில் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் தெருவில் அல்லல்படுகின்றனர்.பைடன்: பொய்... இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். முன்னாள் ராணுவ வீரர்கள் முன்பை விட நலமாகவே உள்ளனர். அவர்களுக்கு இப்போது காப்பீடு கூட இருக்கிறது. முட்டாள் மாதிரி பேசக்கூடாது.டிரம்ப்: நானா முட்டாள்... என் ஆட்சியில் நாடு கடந்து சென்று பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளோம். உங்கள் ஆட்சியில் நியூயார்க் நகரில் புகுந்த பயங்கரவாதிகள் நம் மக்களை கொல்கின்றனர். அந்த லட்சணத்தில் இருக்கிறது உங்கள் குடியேற்ற கொள்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
ஜூன் 29, 2024 13:32

அமேரிக்கா வளர்ந்த நாடு. ஆனால் அங்குள்ள வாக்காளர்கள் முட்டாளாக உள்ளனர். படித்தவர்கள், பண்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்களை ஆதரிக்க மனம் இல்லாததால் இப்படி குழாயடி சண்டை போடும் தலைவர்கள் உருவாகிறார்கள்.


Ramesh Sundram
ஜூன் 29, 2024 09:31

ஏதோ தீ பொறி ஆறுமுகம் மற்றும் வெற்றி கொண்டான் எங்கள் வண்ணை ஸ்டெல்லா அவர்கள் பேச்சை விடவா இவர்கள் பேசி விட்டார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 29, 2024 09:23

இங்கே செய்தியில் இருப்பது போல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன .... ஆனால் அப்படியொன்றும் அநாகரிகமாக இருவருமே பேசவில்லை .... ஒருமுறை டிரம்ப் பைடனை கிரிமினல் என்று அழைத்ததோடு சரி ....


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 08:00

பைடனால் நடக்கவே முடியாமல் செயற்கை உபகரணங்களை வைத்துத்தான் நடக்கிறார். உபகரணங்களை வைத்து பேசவைத்து சிரமம். ஆகவே டிரம்ப் ஜெயித்து தனக்குத்தானே மன்னிப்பு வழங்கி சரித்திரம் படைப்பார்.


Palanisamy Sekar
ஜூன் 29, 2024 03:09

இந்த இருவரின் பேச்சும் சொல்லும் அங்கே உள்ள மக்களால் ரசிக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் பேச்சுக்களை கேட்டுப்ப்பார்க்கணும். பொதுவாகவே ட்ரம்ப் மக்களுக்கு மிக பிடித்தமானவர். மனதில் எதையும் ஒளித்துவைத்துக்கொள்ள தெரியாதவர். ஆனால் சொந்த மக்களின் நலனில் பைடனை விட ட்ரம்ப் தான் நேசமிக்கவர். இருவரில் ட்ரம்ப் தேர்வு செய்யவே மக்கள் விரும்புகின்றார்கள் என்கிறது ஒரு சர்வே. இதே போல பேசிட நம்ம ஊருல ஒருத்தர் இருந்தார்.. அவர் யாருன்னு தெரியும் நமக்கு. அதனை சிலர் வார்த்தை ஜாலம் என்பார்கள் இன்னொருத்தர் அவரோடு போட்டி போடணும்னா யாராக இருக்க முடியும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை