உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது: தலைமை நீதிபதி

பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது: தலைமை நீதிபதி

காத்மாண்டு: பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படிக்கும்போது, ஆசிரியர் பிரம்பால் என் கையில் அடித்த வடு, இன்றும் மனதில் ஆறாமல் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த, சிறார்களுக்கான நீதி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:குழந்தைகளை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது, அவர்களின் வாழ்நாள் முழுதும் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் 5ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.கைவினைக்கலைகள் கற்றுத்தரும் வகுப்பில், சரியான அளவு ஊசியை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டேன். அதற்காக, ஆசிரியர் என் கைகளில் பிரம்பால் அடித்தார். மிகவும் அவமானமாக உணர்ந்த நான், அதை என் பெற்றோரிடம் கூறாமல், காயம் அடைந்த வலது கையை அவர்களிடம் காட்டாமல், 10 நாட்கள் மறைத்தேன்.கையில் இருந்த காயம் ஆறினாலும், அந்த வடு மனதில் இன்றும் ஆறாமல் உள்ளது. இது போன்ற அவமானங்களின் தாக்கம் குழந்தைகள் மனதில் மிக ஆழமாக பதிந்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும், நம் நாட்டின் சிறார்களுக்கான நீதி வழங்கும் முறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் பேசுகையில், ''இந்தியாவில் சிறார்களுக்கான நீதி வழங்கும் நடைமுறையில், போதிய உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் இல்லாதது மிகப் பெரிய சவாலாக உள்ளது.''குறிப்பாக, ஊரக பகுதிகளில் நெரிசலான மற்றும் தரமற்ற சிறார் தடுப்பு மையங்களால், சிறார்களுக்கு முறையான மறுவாழ்வு தடைபடுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Palanisamy Sekar
மே 07, 2024 14:24

உங்களை இவ்வளவு அடித்தும் கூட நீங்கள் பாரபட்சமான தீர்ப்பினை வழங்குவதாக பலரும் எண்ணுகின்றார்கள்


jss
மே 07, 2024 13:39

நீதி துறை இன்னும் கேவலமான நிலையிலதான் உள்ளது. சிறு வயதில் பிரம்படி வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன? சாதரண மனிநனுக்கு சீக்கிரம் நீதி கிடைக்கவில்லை என்றால் அந்த நீதித்துறை, கோர்ட் இவைகளால் எந்த ஒரு உபயோகமும் இல்லை


Rm. lakshmanan Lakshmanan
மே 06, 2024 18:21

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்


Varadarajan Nagarajan
மே 06, 2024 11:17

உங்கள் ஆசிரியர் கொடுத்த தண்டனைகளால்தான் இன்று உங்களால் நீதியுரையில் உயர்ந்த பதவியில் நேர்மையாக உங்களால் நடந்துகொள்ளமுடிகின்றது இந்த ஒழுக்கம் உங்கள் ஆசிரியரால் அன்று உருவாக்கப்பட்டது ஆனால் இன்றைய நிலை என்ன? குழந்தைகளை வீட்டில் பெற்றோர் கண்டிக்க முடியவில்லை, பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்க மற்றும் தண்டித்தால் அவர்கள்மீது வழக்கு அத்தகய குழந்தைகள் தற்பொழுது என்ன ஒழுக்கத்துடன் இருக்கின்றார்கள் என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துக்கொண்டுள்ளோம் இவர்கள் வளர்ந்து ஆளானபிறகு சமூகத்தில் எத்தகய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை அவர்களால் எப்படி கையாளமுடிகின்றது போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுள்ளோம் எனவே கண்டிப்பும் தண்டிப்பும் சிறு வயதில் பள்ளி பருவத்தில் மிக இக அவசியம் இவற்றை தங்கள் போன்ற நீதிபதிகள் நிலை இருத்தல்வேண்டும்


Ravi Kulasekaran
மே 06, 2024 09:17

நீதி துறையை காப்பாற்ற ஆண்டவனால் கூட முடியாது நீதி துறையை அரசியல் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா என்ற போட்டி தமிழில் நாட்டில் காவல் துறை உலக தரவாய்ந்த ஸ்காட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பிடுடப்பட்டது ஆனால் தற்போது காவல் ஏவல் துறையாக மாறி இந்திய தேச மானத்தை காற்றில் பறக்க விட்டு கொண்டு இருக்கிறது உதாரணத்திற்கு சவுக்கு சங்கர் என்ற பத்திரிகை யூடுயூபரை கஞ்சா வைத்திருந்தாக பொய் வழக்குகள் போட்டு கேவலமான செயல் காவல் துறை விசாரணை நடத்தி முடிவு எடுக்காமல் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டுகிறது உதாரணமாக கைது நடவடிக்கையின் குண்டர்களை திமுகவின் பெண் குண்டர்களை தூண்டி கலவரம் உருவாக்க காவல் துறை ஏவல் துறையாக மாறி உள்ளது


jss
மே 07, 2024 13:42

உலகிலேயே அடிமைப்படுத்தப்பட்ட காவல் துறை தமிழ் நாட்டிலதான் உள்ளது. இதில் ஸ்காட்லாந்து யார்ட் என்ற பேர் வேறு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை