உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்க தேச பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் உத்தரவு

வங்க தேச பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : வங்கதேச பார்லிமென்டை கலைத்தார் அந்நாட்டு அதிபர் முகமது ஷகாபுதீன்.வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவம் தலையிட்டது. பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி, ஷேக் ஹசீனாவுக்கு, ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான், , 45 நிமிட கெடு விதித்தார்.இதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து விலகுவதாக ஷேக் ஹசீனா அறிவித்தார். நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமைடந்தார்.இதையடுத்து அதிபர் முகமது ஷகாபுதீன் உயரதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியபின் வங்கதேச பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். உடனடியாக இடைக்கால அரசு அமைக்க அதிபர் நடவடிக்கை எடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை