உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலவச யோகா பயிற்சி: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு

இலவச யோகா பயிற்சி: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: நம் நாட்டின் பழமையான உடல், மன மற்றும் ஆன்மிக பயிற்சியான யோகாவை, பாகிஸ்தான் அரசு முதல் முறையாக இலவசமாக பயிற்றுவிக்கிறது.யோகா கலை பொதுவாக இந்தியாவுடன் தொடர்புடையது. இன்று இதை உலகம் முழுதும் பலரும் ஆர்வமுடன் பயிற்சி செய்து வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் யோகாவை முறையாக கற்று தரும் நிறுவனங்கள் இல்லை. முஸ்லிம் நாடு என்பதால் இதற்கு சில தரப்பில் எதிர்ப்பும் எழுந்தது. இருப்பினும், தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக யோகா பயிற்சிகளை ஆர்வம் உள்ளவர்கள் கற்கின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதை பராமரிக்கும் அமைப்பான, தலைநகர் வளர்ச்சி ஆணையம், அங்கு உள்ள பாத்திமா ஜின்னா பூங்காவில் இலவச யோகா வகுப்புகளை துவக்கிஉள்ளது. பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச யோகா வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம் என அந்த ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பூங்காவுக்கு வருபவர்கள் கூறுகையில், 'தலைநகரின் முக்கிய பூங்காவில் இலவச யோகா வகுப்பை அரசே துவங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. இது இந்தியாவுக்கு நேர்மறை செய்தியை பரப்பி, இரு தரப்பு உறவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jai
மே 05, 2024 19:12

யோகாவின் நன்மையை தெரிந்து கொண்டு பல நாடுகள் வருங்காலத்தில் யோகாவை செயல்முறை படுத்த தான் போகிறார்கள். உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் தரும் யோகாவை நாமும் முறையாக செய்து அதன் நன்மைகளை அடையலாம். இதை பரவலாக பள்ளிகள் கல்லூரிகள் என்று நடைமுறைப்படுத்த மக்கள் மீது உண்மையான அக்கறை உள்ள ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும்.


canchi ravi
மே 05, 2024 15:11

பாக்கிஸ்தான் கிளை காரியாலத்தை துவம்சம் செய்த மகான்களுக்கு யோகா ஒன்றுதான் குறைச்சல்


SIVAN
மே 05, 2024 13:03

பாகிஸ்தான்காரன் யோகா இல்லை பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் அவனுடைய எதிர்மறை குணம் மாறாது இவனுங்க உமி, நம்மளோட எதுக்கு சேரனும் ஊதி திங்கவா? எப்போ இருக்க பாகிஸ்தானிகளுக்கு நாற்று பற்றை விட மதப்பற்று மேலோங்கி இருக்கிறதோ, இவனுங்க எதனை காலம் ஆனாலும் உருப்பட வழியே இல்லை நமக்கு எதுக்கு தரித்திரம்


சுந்தர்
மே 05, 2024 06:09

யோகாஸ்தான் ஜிந்தாபாத்


ராமகிருஷ்ணன்
மே 05, 2024 06:01

மதவிரோத செயல்களை செய்ய கூடாது. துப்பாக்கி, வெடிகுண்டு பயிற்சி தரபட்டு வருவது மாற்க்கூடாது. பாக்கிஸ்தான் ராணுவம் உடனடியாக தடுக்கவும்


J.V. Iyer
மே 05, 2024 03:59

யாரை நம்பினாலும் பன்றிஸ்தானியர்களை நம்பக்கூடாது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ