உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன் : செய்யாத தவறுக்காக சிறைத் தண்டனை அனுபவித்த பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், அதற்கு காரணமாக இருந்த பொறியாளரின் மன்னிப்பை நிராகரித்துள்ளார்.பிரிட்டனில் உள்ள தபால் ஆபீஸ்கள் கடந்த 1999 முதல் 'புஜிட்சு' நிறுவனம் தயாரித்த மென்பொருளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வரவு - செலவு கணக்கு, பொருட்கள் இருப்பு விபரம் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்ப முறையிலேயே கையாளப்பட்டு வந்தன.இந்நிலையில், பிரிட்டனின் சுர்ரே பகுதியில் உள்ள வெஸ்ட் பைப்லிட் கிராமத்தில் செயல்படும் தபால் ஆபிஸில் மேலாளராக வேலை செய்த இந்திய வம்சாவளியான சீமா மிஸ்ரா என்பவர், அங்கிருந்த 70 ஆயிரம் பவுண்டுகள், இந்திய மதிப்பில் 74 லட்சம் ரூபாயை திருடியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் 'புஜிட்சு' நிறுவன பொறியாளர் கரேத் ஜென்கின்ஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமாவுக்கு நான்கரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது அவர் தன் இரண்டாவது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரான்ஸ்பீல்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தபால் நிலையங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டு, ஏராளமானோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புஜிட்சு நிறுவன சாப்ட்வேரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே தபால் நிலையங்களில் இருந்த நிதியில் முரண்பாடு ஏற்பட்டது கடந்த 2021ல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், சாட்சியம் அளித்த கரேத் ஜென்கின்ஸ், 'சீமா சிறை சென்ற போது கர்ப்பிணியாக இருந்தது எனக்கு தெரியாது. பல ஆண்டுகளுக்கு பிறகுதான் அது எனக்கு தெரிய வந்தது. சீமா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என சமீபத்தில் கூறினார்.இதை நிராகரித்துள்ள சீமா, 'இந்த மன்னிப்பை எவ்வாறு நான் ஏற்க முடியும்? என் 10 வயது மகன் பிறந்த நாளில், அவன் அம்மாவை சிறைக்கு அனுப்பியதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் சிறையில் இருக்கும் போது என் வயிற்றில் இருந்து கஷ்டப்பட்ட இளைய மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவரின் மன்னிப்புகளை ஏற்கவில்லை' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

kalyan
ஜூன் 30, 2024 20:15

செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்துவிட்டு , பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்பதை விட்டு விட்டு அவரை மன்னித்து விடுகிறோம் என்று கூறும் திமிர் முதல் கணினியை உருவாக்கிய கணித மேதை ஆலன் டூரிங்கிடமிருந்து 5 வருடம் முன்பு பொய்யாக புனைந்த அல்லது நிஜம் என்றாலும் எவ்வாறு குற்றம் ? ஓரினச்சேர்க்கை குற்றத்திற்கு ரசாயன காயடித்தல் தண்டனை கொடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கி டுரிங்கை தற்கொலைக்கு தூண்டிய இங்கிலாந்து அரசின் குற்றத்திற்கு இங்கிலாந்து அரசி மன்னிப்பளித்த திலிருந்து ஆரம்பமாகி விடத்து . பின் இந்திய வம்சாவளி எப்படி தப்பும் ?


Swamimalai Siva
ஜூன் 30, 2024 10:08

கொண்டையை மறைக்க தெரிந்த உமக்கு சீப்பை மறைக்கத் தெரிய வில்லையே...


S MURALIDARAN
ஜூன் 27, 2024 18:13

இந்திய பெண்மணியின் செயலுக்கு தலை வணங்குகிறேன். செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்கி மன உளைச்சல் ஏற்படுத்திய அந்நாட்டு நீதி மன்றத்தை சும்மா விடக் கூடாது. இந்திய தூதரகம் மூலம் மேல் முறையீடு செய்து தக்க நிவாரணம் பெற வேண்டும். இந்திய அரசாங்கம் இதற்கு உதவ வேண்டும். இந்திய மானம் காப்பற்ற படவேண்டும்.


Sudhagar Arumugam
ஜூன் 28, 2024 09:58

அவங்க பிரிட்டன் குடிமகள். இந்திய தூதரகம் தலையிட முடியாது.


S MURALIDARAN
ஜூன் 27, 2024 17:50

இந்திய வம்சாவளி பெண்ணை நினைத்து பூரிப்படைகிறேன். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன். செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்து விட்டு பிறகு மன்னித்து விட்டால் தண்டனை அனுபவித்த காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் தீருமா ? அவர் இதோடு விடாமல் சம்பந்த பட்ட நிறுவனத்திடம் இருந்து தகுந்த நக்ஷ்ட ஈடு பெற அந்நாட்டு நீதி மன்றத்தை நாடு வேண்டும். இந்திய மானத்தை காக்க இந்தியாவும் அவருக்கு அங்குள்ள தூதரகத்தின் மூலம் உதவ வேண்டும்.


பாரதி
ஜூன் 27, 2024 15:41

அருமை. வீரத் தாய்மை வாழ்க.


Alagusundram KULASEKARAN
ஜூன் 27, 2024 14:37

மன்னிப்பு சொல் தமிழில் எனக்கு பிடிக்காத சொல் என்று விஜயகாந்த் ரமணா என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் அது உண்மை தான் பண வசதி இல்லாத கேட்க வேண்டும் விட்டு தர வேண்டும் இது வழக்கம் ஆனால் இது நியாயமான சமுதாயமா நம்பிக்கை என்ற பெயரில் செய்தநான் ஒரு காரியம் என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என் அனுபவம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என் தந்தை சொன்ன சொல் அது பெற்ற தாயை நம்பாதே என்று சொல்ல வில்லை


Tiruchanur
ஜூன் 27, 2024 11:54

அந்த the vidiyal என்ஜினீரையும் 4 வருஷம் சிறையில் அடைத்து கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்


Sundarraj
ஜூன் 27, 2024 11:26

தண்டனை முடிந்தபிறகு மன்னிப்பு எதற்கு சகோதரி அந்த நபரிடம் இருந்து மிகப்பெரிய தொகையை நஷ்ட ஈடாக வாங்குங்கள்


venkatakrishna
ஜூன் 27, 2024 10:52

முன் பின் யோசிக்காமல் பதவி சுகத்தில் முரணான சாட்சியம் அளித்த அந்தப் பொறியாளருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.


GoK
ஜூன் 27, 2024 09:43

மோதப்பில இருந்தா நெனப்பு எங்க வரும்


மேலும் செய்திகள்