மேலும் செய்திகள்
பட்டா கத்தியால் கேக் வெட்டி கும்பல் அட்ராசிட்டி
15-Sep-2024
டொரன்டோ; முதுகலை படிப்பதற்காக கனடா சென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் மீர்பேட்டையைச் சேர்ந்தவர் பிரனீத். இவர் தன் பிறந்தநாளைக் கொண்டாடச் டொரன்டோ நகரில் உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சென்றார்.தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தவர், நண்பர்கள் கவனிக்காத போது நீரில் மூழ்கி விட்டார்.உடலை கைப்பற்றிய அந்நாட்டு போலீசார், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பிரனீத்தின் தந்தை, தனது மகனின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
15-Sep-2024