உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 253 இந்தியர்களை திருப்பி அனுப்பியது ஜமைக்கா!

253 இந்தியர்களை திருப்பி அனுப்பியது ஜமைக்கா!

உரிய அனுமதியின்றி தனி விமானத்தில் சென்று இறங்கிய இந்தியர்கள், 253 பேரை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்கா திருப்பி அனுப்பியது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், இவர்கள் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள ஜமைக்கா தீவுக்கு ஒரே நேரத்தில் 250 இந்தியர்கள் சென்றிருந்தது சலசலப்பை கிளப்பியிருந்தது. அதாவது, இவர்கள் ஒரே விமானத்தில் ஜமைக்கா சென்றிருக்கின்றனர். இதில் சந்தேகமடைந்த ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அதாவது துபாயிலிருந்து இன்று ஜமைக்காவின் நார்மன் மேன்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சுமார் 253 இந்திய பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்த 253 பேரில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.ஜமைக்கா சென்ற இந்தியர்கள் மீண்டும் துபாய்க்கு அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை