உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா இந்து எம்.பி.க்கு காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

கனடா இந்து எம்.பி.க்கு காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோரண்டோ: கனடாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறு என கனடா இந்து எம்.பி.,க்கு காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த்சிங் பன்னூன் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று கனடாவில் எட்மன்டன் நகரில் உள்ள பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் கோயிலில் சுவற்றில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் சில எழுதப்பட்டிருந்தது. இந்த நாசவேலையை காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவு பெற்ற நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், வீடியோ ஒன்றை வெளியிட்டு கனடா இந்து எம்.பி., சந்திர ஆர்யா என்பவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் காலிஸ்தான் தனிநாடு தொடர்பாக கனடாவில் பொது வாக்கெடுப்பு வரும் 28-ம் தேதி நடக்கிறது.அதற்கு முன்பாக கனடாவை விட்டு உனது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுடன் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
ஜூலை 25, 2024 17:33

வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் இருவரும் இந்தியர்கள்.


சுலைமான்
ஜூலை 25, 2024 11:55

கனடா ஒரு தீவிரவாத நாடு


அளந்தராமன்
ஜூலை 25, 2024 10:57

இவன் யார் மற்றவரை நாட்டை விட்டு பக்கச் சொல்ல?


தத்வமசி
ஜூலை 25, 2024 09:58

சீக்கிய சமுதாயம் என்பது இந்துக்களின் ஓர் அங்கம். அவர்களை அன்றைய குருமார்கள் ஏன் தொடங்கி வைத்தனர் என்பதன் பொருள் இவருக்கு தெரியவில்லை. இன்று வெளிநாட்டு பணத்தில் உண்டு கொழுக்கும் இவர் சீக்கியம் என்பதே தெரியாமல் பேசுகிறார். முன்பு பஞ்சாப் மாநிலத்தில் தினமும் கொலை நடந்து கொண்டிருந்தது இவருக்கு நினைவில்லை. இப்போது மிகவும் அமையாக உள்ள மாநிலத்தில் மீண்டும் இவர்கள் விஷ விதைகளை விதைக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 22:18

சீக்கியர்கள் இந்துக்களை காக்கவந்த காவல் தெய்வம் போன்றவர்கள். ஆனால் இந்த தீவிரவாதி அதற்கு நேர் எதிராக செயல்படுகிறான். நாளை கனடாவுக்கு எதிராக செயல்பட மாட்டான் என்ற உத்திரவாதமெல்லாம் கிடையாது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 24, 2024 21:37

அமெரிக்கா கொடுக்கும் தைரியம் .....


Santhakumar Srinivasalu
ஜூலை 24, 2024 20:45

இது ஒரு மோசமான கனடா நாட்டின் அரசியல்! இதையே பாகிஸ்தானில் முதலில் விதைத்து அமெரிக்கா அறுவடை செய்து ஒழிக்க முடியாமல் மொத்த பொருளாதாரத்தை தொலைத்து திணறிக்கொண்டிறுக்கிறது!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை