உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மகளை வடகொரியாவின் அடுத்த அதிபராக்க கிம்ஜோங் உன் திட்டம்

மகளை வடகொரியாவின் அடுத்த அதிபராக்க கிம்ஜோங் உன் திட்டம்

சியோல்: தன் மகளை வடகொரியாவின் அடுத்த அதிபராக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், 39, 2011ல் அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்இந்நிலையில் தென் கொரியாவின் உளவு நிறுவனம், வடகொரியாவின் அரசியல் சூழல் குறித்து யூன்ஹாப் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள ரகசிய தகவலில் கூறியுள்ளதாவது,வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தன் 12 வயது மகள் ஜூ ஏ என்பவரை நாட்டின் அடுத்த அதிபராக்கிட திட்டமிட்டு இப்போது பயிற்சி அளித்து வருகிறார். பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 30, 2024 02:42

இது நம்பும்படியாக இல்லை... ஏனெனில் வ. கொரியா Kim Jong. un சகோதரி kim yo Jong ன் கட்டுபாட்டில் தான் உள்ளது அவரல்லாது.. அங்கு ஒரு அணுவும் அசையாது


Raj
ஜூலை 30, 2024 01:50

இது நம்மவரின் ஐடியா இருக்குமோ?


R Kay
ஜூலை 29, 2024 21:19

எங்கும் குடும்பம் எதிலும் குடும்பம் அடுத்தவன் குடும்பம் தழைக்க சேவகம் பார்த்து அண்டிப்பிழைக்கும் சுயமரியாதை, தன்மானமற்ற கொத்தடிமைகள் உள்ளவரை ஜனநாயகம், குடியரசு எல்லாம் ஏட்டளவிலேதான்


Jagan (Proud Sangi)
ஜூலை 29, 2024 20:53

முன்பு சோவியத், கியூபா , வடகொரியா . உண்மையான கம்யூனிசம் இது தான். அதனால் தான் கருணாநிதி தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொண்டார் . இங்கும் காரத் மற்றும் இதர குடும்ப கட்டுப்பாட்டில் தான் கட்சி உள்ளது


கல்யாணராமன்
ஜூலை 29, 2024 20:49

ஆரவள்லி, அலங்கார வள்ளி சூர வள்ளி, சுந்தர வள்ளி


Ramesh Sargam
ஜூலை 29, 2024 20:38

வடகொரியாவிலும் வாரிசு அரசியல். நம்நாட்டு காங்கிரஸ், திமுக வாடை அங்கே எப்படி பரவியது?


மேலும் செய்திகள்