| ADDED : மே 27, 2024 12:48 PM
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uru3no7j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும், சேதமடைந்த சாலைகளாலும் மீட்பு பணிகளுக்கு இடையூறாக உள்ளன. நிலச்சரிவினால், சுமார் 1,250 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த வீடுகள் சுமார் 25 அடி மண்ணிக்குள் புதைந்துள்ளன. இதை பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.
கடவுளுக்கு நன்றி
'என் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நான் இறந்துவிடுவன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் பெரிய பாறைகள் என் மீது வீழவில்லை. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நான் பாறைக்குள் சிக்கியிருந்தேன். பின்னர் மீட்கப்பட்டேன்' என நிலச்சரிவில் தப்பிய ஜான்சன் என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.